பதவியை ராஜினாமா செய்யும் தினகரன்... திடீர் முடிவால் அமமுகவினர் அதிர்ச்சி!

By sathish kFirst Published Dec 19, 2018, 7:37 PM IST
Highlights

கடந்த சில நாட்களாகவே அமமுகவில் நடக்கும் அனைத்தும் மர்மமாகவே இருக்கிறது. செந்தில் பாலாஜி திமுகவிற்கு போனது, தற்போது ஆண்டிப்பட்டி தங்கம் எதனால் இந்த பிரச்சனை செய்துகொண்டிருக்கிறார். என கணிக்கவே முடியாமல் போகிறது. 

பெங்களூரு சிறையில் நேற்று சசிகலாவை சந்தித்த 2 தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்,  தினகரனை பற்றி சொல்லி கண்ணீர் விட்டு அழுதனர். அதைத்தொடர்ந்து இளவரசி மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா, இன்னொரு மகள் ஷகிலா, அவரது கணவர் ராஜராஜன், நடராஜன் தம்பி பழனிவேல் என தினகரனுக்கு எதிராக இருக்கும் ஒரு கூட்டமே சசிகலாவை சந்தித்திருக்கிறது. 

இந்த சந்திப்பில், இளவரசியின் பிள்ளைகள் ஜாஸ் விவேக், மற்றும் கிருஷ்ணப்பிரியா,  ஷகிலா என பழைய பாகையில் தினகரனையும் அவரது மனைவியையும் பற்றி எக்கச்சக்கமாக போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

சசிகலா சொன்ன மூன்று வேலைகளை  தினகரன் தட்டிக் கழித்ததாகவும்,  அமமுகவில் இருப்பவர்கள் பலர் அதிமுகவில் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்றும், அமமுக  முக்கியமான ஆட்களை  திமுக வலைக்க திட்டமிட்டிருப்பதாகவும் மொத்தத்தில் திமுகவும் அதிமுகவும், அமமுகவை மொத்தமாக வாஷ் பண்ணிவிடும்  அதற்கு முக்கிய காரணமே தினகரன் மற்றும் அரவது மனைவி அணுராதா தான் என சொல்லியிருக்கிறார்கள்.

இதனையடுத்து உள்ளே சென்ற தினகரனை வாய்க்கு வந்தபடி கத்தினாராம் சசிகலா, பதிலுக்கு எதுவும் பேசாமலேயே கண்ணீருடன் திரும்பினாராம் தினகரன்.  சசி திட்டியது கூட தினகரக்கு கோபம் இல்லயாம், தனக்கும் தனது கட்சிக்கும் இப்படி நடக்கும் சூழலில் இவர்கள் இப்படி போட்டுக் கொடுக்கிறார்களே எண்ணற்ற ஆதங்கம் ரொம்பவே இருந்ததாம்.

ஒட்டுமொத்த கூட்டமும் கிளம்பி வரும்போதே தெரியும் என்னையும், எனது மனைவி அணுராதாவையும், தாறுமாறாக திட்டுகிறார் சசிகலா. இவர் இப்படி திட்டுவார் என்று எனக்கு தெரியும். அதனால்தான் எப்பொழுதும் என் மனைவியுடன் வந்து சசிகலாவை சந்திக்கும் நான், இந்த முறை மனைவியை அழைத்து வரவில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பினாராம்.

கடைசியாக, தினகரனை துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற மெயின் மேட்டரை சொன்னதால் ரொம்பவே கலங்கிப் போனாராம் தினகரன், அவர்கள் தன்னை நீக்குவதற்கு முன்பாக நாமே அந்த பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் இருக்கிறாராம் தினகரன்.  மூக்குப்பொடி சித்தர் மறைந்ததிலிரிருந்து தினகரனுக்கு அடிமேல்  அடி என தொடர்ந்துகொண்டிருக்கிறது. முதலில் செந்தில் பாலாஜி திமுகவிற்கு போனது,அடுத்ததாக, ஆண்டிப்பட்டி தங்கம் தொடர்ந்து பிரச்சனை கிளப்புவது, குடும்பமே சேர்ந்து குடைச்சல் கொடுப்பதால் இப்போது, தினகரனின் பதவிக்கே ஆபத்தில் வந்து நிற்கிறது. இது எங்கே போய் முடியுமோ என அமமுகவினர் அச்சத்தில் உள்ளனர்.

click me!