
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை என்றும் பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டாக சதி செய்து தேர்தலை நிறுத்தி விட்டதாக டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற இருந்த நிலையில் தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று நள்ளிரவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி. தினகரன் , ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப்படுகொலை என குற்றம்சாட்டினார்.
பாஜகவும், தேர்தல் ஆணையமும் கூட்டாக சேர்ந்து தேர்தலை ரத்து செய்து சதி செய்து விட்டதாக தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் பல்வேறு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றியது. தற்போத நான் வெற்றி பெறுவேன் எனத்தெரிந்தும் தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தி உள்ளது. என தினகரன் குற்றம் சாட்டினார்.
தேர்தல் நேரத்தில் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்த அவசியம் என்ன? என கேள்வி எழுப்பிய தினகரன், விஜயபாஸ்கர் வீட்டில் பணம் கைப்பற்றியதாக கூறுவதில் உண்மையில்லை எனவும் தினகரன் கூறினார்.
எனது வெற்றி தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் இடைத் தேர்தல்நடைபெறும்போது, பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆர்.கே.நகரில் பாஜக 500 ஓட்டுகள் கூட வாங்க முடியாது என்றும். பாஜகவுக்கு மக்களிடம் போதிய ஆதரவு இல்லை என்றும் கருத்துத் தெரிவித்த தினகரன் . அதிமுகவை அழிக்க யார் சதி செய்கின்றனர் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.