ஆர்கே நகர் இடைத்தேர்தல் அதிரடி ரத்து...தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு..

 
Published : Apr 10, 2017, 12:37 AM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
ஆர்கே நகர் இடைத்தேர்தல் அதிரடி ரத்து...தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு..

சுருக்கம்

rk nagar election cancelled

ஆர்கே நகர் இடைத்தேர்தல் அதிரடி ரத்து..

ஆர்கே நகர் இடைதேர்தல் வரும் 12 ஆம் தேதி  நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே  அறிவித்து இருந்தது .இதனை தொடர்ந்து கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரச்சாரம் செய்வதற்கு  நாளை மட்டுமே கால அவகாசம்  உள்ள  நிலையில்,  ஆர் கே  நகர் முழுவதும்  மக்கள்  நெரிசல் அதிகம் காணப்டுகிறது.

இந்நிலையில், பணபட்டுவாடா செய்ததாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தது.இது குறித்த அறிக்கையை இந்திய  தலைமை தேர்தல் ஆணையத்திடம்  வழங்கப்பட்டது. இது குறித்த  தீவிர ஆலோசனை  நடந்த  பிறகு , தற்போது  தேர்தல்  ஒத்திவைக்க  முடிவு செய்து , இந்திய  தேர்தல்  ஆணையம்  அதிகாரபூர்வ  அறிவிப்பை  வெளியிட்டது

பணபட்டுவாடாவை அடுத்து இந்திய தேர்தல் ஆணையம் இந்த  முடிவை  எடுத்துள்ளதாகவும், பண பட்டுவாடா அதிக அளவில் நடைப்பெற்று உள்ளதால்,  இந்த  சமயத்தில்  தேர்தல்  நடைப்பெற்றால்  அது நியாயமானதாக இருக்காது  என்பதாலும்  தற்போது  தேர்தல்  ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், எப்பொழுது  தேர்தல்  நியாயமான  முறையில் நடைபெறுவதற்கு  ஏற்ற  சூழல்  ஏற்படுகிறதோ , அப்போதுதான்  தேர்தல்  நடக்கும்  என  இந்திய  தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது .

தேர்தலை ரத்து செய்ததற்கான 29 பக்க காரணங்களை, இணையதளத்தில்   தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது .   

PREV
click me!

Recommended Stories

உங்கள் மிரட்டலுக்கு திமுக தலைமை அல்ல... தொண்டன் கூட பயப்பட மாட்டான்..! துணைக்கு கூட்டம் சேர்க்கும் உதயநிதி
விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!