துரோகிகளை கூண்டோடு அழிக்கணும் கொஞ்சம் விட்டுக்கொடுங்க தளபதி!: தி.மு.க.விடம் கெஞ்சினாரா தினகரன்?

 
Published : Oct 27, 2017, 11:56 AM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
துரோகிகளை கூண்டோடு அழிக்கணும் கொஞ்சம் விட்டுக்கொடுங்க தளபதி!: தி.மு.க.விடம் கெஞ்சினாரா தினகரன்?

சுருக்கம்

Dinakaran Political proposal to MK stalin

அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை! எனும் சித்தாந்தம் தாறுமாறாக பொருந்துவது தமிழக அரசியலுக்குத்தான். ரோடு ரோலரும் ஒரு நாள் லாரியில் ஏறும்! என்பது போல் தி.மு.க.வின் தயவை அ.தி.மு.க. நாடி நிற்கிறது என கசியு  தகவல் ஜெர்க்கடிக்க வைக்கிறது. 

அதாவது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தங்களுக்காக விட்டுத் தரும்படி ஸ்டாலினிடம் தினகரன் அணி கோரிக்கை வைத்திருப்பதாக கிளம்பியிருக்கிறது ஒரு தகவல்!
எதற்காக இந்த கோரிக்கையாம்?

ஜெயலலிதாவின் மரணத்தை ஒட்டி காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பருக்குள் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 
ஆளும் அ.தி.மு.க.வின் எடப்பாடி - பன்னீர் அணி அமைச்சர்கள் பரிவார பலத்துடன் இந்த தொகுதியில் போட்டியிட தயாராகி வருகிறது. அதே வேளையில் தினகரனும் ‘ஆர்.கே.நகரில் நிச்சயம் போட்டியிடுவோம்’ என்று அறிவித்துள்ளார். 

தினகரனை பொறுத்த வரையில் இந்த இடை தேர்தல் வெற்றியை தங்கள் அணிக்கான மிகப்பெரிய கெளரவமாகவும், மக்கள் தரும் அங்கீகாரமாகவும் பார்க்கிறார். முதல்வர்கள் அணியிடம் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கும் தங்கள் அணி இந்த தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தாங்களே தொண்டர் மற்றும் மக்கள் ஆதரவுடைய நிஜ அ.தி.மு.க. என்பதை நிரூபித்துவிடலாம் என்று துடிக்கிறார். இந்த வெற்றிக்காக அரசியல் ஈகோக்களை விட்டு எந்தளவுக்கு இறங்கி உழைக்க அந்த அணி ரெடி. அதன் வெளிப்பாடே ஸ்டாலினுக்கு விட்ட தூது என்று சொல்லப்படுகிறது. 

இதைப் பற்றி பேசும் அரசியல் விமர்சகர்கள் “ இந்த தேர்தலென்பது அ.தி.மு.க. அணிகளுக்கு மட்டுமில்லை தி.மு.க.வுக்கும் மிக முக்கியமான ஒன்றுதான். காரணம் ஜெ., மரணத்துக்கு பின் வரும் முதல் தேர்தல். இந்த ஆட்சியின் மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள் என்பதை காண்பிக்கும் விதமாக தாங்கள் இதில் வெற்றி பெற வேண்டும் மேலும் இந்த வெற்றியை காட்டியே எதிர்வரும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றியை எட்ட வேண்டும் என்று நினைக்கிறது. 
ஆனால் தினகரனுக்காக ஸ்டாலினின் நெருங்கிய நபர்களிடம் பேசியிருக்கும் நபர்களோ எடுத்து வைத்திருக்கும் வாதமே வேறு டிஸைனாக இருக்கிறது.

‘இந்த தேர்தலில் நீங்கள் ஜெயித்தால் உங்கள் கட்சிக்கு அதிகம் ஒரு எம்.எல்.ஏ. கிடைப்பார் அவ்வளவே. ஆனால் நாங்கள் ஜெயித்தால் ஆட்சியையே கவிழ்க்குமளவுக்கு நிலையை கொண்டு போவோம். எடப்பாடி மற்றும் பன்னீர் இருவரின் மீது பா.ஜ.க. வைத்திருக்கும் அரசியல் செல்வாக்கை தவிடு பொடியாக்குவோம். இவர்களிருவரை நம்பி இனி தமிழகத்தில் நாம் காலூன்ற நினைப்பது வீண் வேலை என்று அமித்ஷா தரப்பை நினைக்க வைப்போம். 

எனவே தயவு செய்து இந்த தேர்தலை புறக்கணித்து ஒதுங்கி நில்லுங்கள்! என்று வேண்டி விரும்பிக் கேட்டிருப்பதாக தகவல்.

ஸ்டாலினின் நெருங்கிய சகாக்களில் பாதி பேர் இதை யோசிக்கலாம்! என்று சொல்ல மீதி பேரோ வன்மையாக மறுத்திருக்கிறார்களாம். 

ஆனால் அதேவேளையில் தி.மு.க.விடம் இப்படியொரு கோரிக்கையுடன் தாங்கள் சென்றதாக வெளியே சுற்றுவது வெறும் வதந்திதான்! யாரையும் நாங்கள் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை. அ.தி.மு.க.வின் தொண்டர்கள் மற்றும் மக்கள் பலம் முழுமையாக எங்களுக்கு இருப்பதால் வெகு சிம்பிளாக இதில் ஜெயிப்போம்! என்று மறுக்கிறார்கள். 

என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.இன்னும் சில நாட்களில் எல்லா கத்திரிக்காய்களும் சந்தைக்கு வந்தே தீரும்!” என்கிறார்கள். நெசந்தானே!

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!