
அஇஅதிமுக புரட்சித் தலைவி அம்மா வேட்பாளர் மதுசூதனன் இன்று காலை ஆர்.கே.நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்பட அதிமுகவினர் வாக்கு சேகரிக்க சென்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், நாகூரான் வட்டத்தில் இருந்து நாளை மாலை 3 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தை தொடங்குகிறார். வேட்பாளர் பிரச்சாரமும் நாளை முதல் முறைப்படி துவங்குகிறது. தேர்தல் பணிமனையும் நாளை திறப்படுகிறது.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க நாங்கள் போராடுவோம். எங்களுடைய வாக்குறுதியில் முதல் வாக்குறுதி அதுதான். ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களை சட்டத்தினால் தண்டிப்பதற்கு நாங்கள் எல்லா முயற்சிகளையும் எடுப்போம். ஜெயலலிதாவின் நிறைவேறாத வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.
ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவோம். ஜெயலலிதாவின் கனவுகளை நினைவாக்கும் வகையில் 108 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை நாளை வெளியிடுவோம். இந்த தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்ற ஜெயலலிதாவின் வாக்குறுதியை எப்பேற்பட்டாவது காப்பாற்றுவோம் என கூறினார்.
மேலும், ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் தனது தனி டீமை வைத்து தயாரித்துள்ள இந்த 108 வாக்குறுதிகள் அடங்கியுள்ள அறிக்கைகளை அறிவிக்கவுள்ளதால், தினகரன் டீம் மிரண்டுபோய் உள்ளது.
இதற்கு முன்பு சசிகலாவை முதல்வராவதை முற்றுப்புள்ளி வைத்து முடித்து வைத்து விட்டு, இரட்டை இலையை முடக்கும் முயற்சியில் சசி டீமுக்கும் தொப்பி வாங்கிக்கொடுத்தார். இதனையடுத்து அடுத்த ஆட்டத்தை நாளை முதல் தொடங்கவிருக்கிறார்.
ஏற்கனவே வாக்காளர்களை கவனிக்க பல குழுக்களை அமைத்து அதற்கான வேலைகளை நடத்தி வந்தாலும், தி.முகவை கண்டும் பயப்படாமல் இருந்த தினகரன் ஓ.பி.எஸின் அடுத்தடுத்த அதிரடியை சமாளிக்க முடியாமல் திணறவைத்துள்ளது. இதை சமாளிக்க அதற்கு சமமான வாக்குறுதிகளை தயார் செய்ய தேர்தல் குழுவினரிடம் சொல்லியிருக்கிறாராம்.