மீண்டும் தொடங்கியது கிடுக்கிப்பிடி விசாரணை - 2 வது நாளாக ஆஜரானார் தினகரன்

 
Published : Apr 23, 2017, 02:20 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
மீண்டும் தொடங்கியது கிடுக்கிப்பிடி விசாரணை - 2 வது நாளாக ஆஜரானார் தினகரன்

சுருக்கம்

dinakaran appeared in delhi court

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி  போலீசாரின் முன்பு டி.டி.வி.தினகரன் 2 வது நாளாக ஆஜரானார்.

டெல்லி ஓட்டல் ஒன்றில் டெல்லி போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சுகேஷ் என்பவரிடம் இருந்து ரூ.1.30 கோடி பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவரை கைது விசாரணை நடத்தியதில் இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வாக்குமூலம் அளித்தார்.

அதன் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், சென்னை வந்த டெல்லி போலீசார் தினகரன் வீட்டிற்கு சென்று சம்மன் அளித்தனர்.

ஆனால் நேரில் ஆஜராக 3 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என தினகரன் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதற்கு டெல்லி போலீசார் மறுப்பு தெரிவித்து குறிப்பிட்ட நாளில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதன்படி டெல்லி குற்றப்பிரிவு போலீசாரின் முன்பு ஆஜராவதற்கு விமானம் மூலம் நேற்று டெல்லி சென்றார் டி.டி.வி.தினகரன்.

இதையடுத்து டெல்லி குற்றப்பிரிவு போலீசாரின் முன்பு நேற்று நேரில் டிடிவி ஆஜரானார். அப்போது அவரிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் அவரது நண்பரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதைதொடர்ந்து 2 வது நாளாக இன்றும் டிடிவி தினகரன் டெல்லி போலீசார் முன்பு ஆஜரானார்.

அடுத்தடுத்து டெல்லி போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தினகரன் திணறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

PREV
click me!

Recommended Stories

திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!
கழுத்தை நெறிக்கும் சிபிஐ..! டெல்லிக்கு வர விஜய்க்கு உத்தரவு..!