
தற்போது நடைபெற்று வரும் அரசுக்கும், கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன், செய்தியாளர்களிடம் பேசும்போது, கட்சியைக் கொல்லைப்புறமாக கைப்பற்றும் எண்ணத்தில் சில அமைச்சர்கள், நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
தற்போது நடைபெற்று வரும் தமிழக அரசுக்கும், கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்றும், சரியான வழிக்கு அமைச்சர்கள் வர வேண்டும் என்றும் கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில், அமைச்சர்கள் செல்லவில்லை என்றால், அவர்களுக்கும் ஆபத்து என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
ஓ.பி.எஸ். ஆதரவாளர் கே.பி. முனுசாமி, திருடன் என்று கூறியது பற்றிய கேள்விக்கு, மக்களுக்கு திருடர்கள் யார் என்பது நன்றாக தெரியும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.