எங்களுக்கு உயிரை விட மானம் தான் முக்கியம்... ரெய்டுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஜெயக்குமார்..!

Published : Aug 10, 2021, 10:55 AM IST
எங்களுக்கு உயிரை விட மானம் தான் முக்கியம்... ரெய்டுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஜெயக்குமார்..!

சுருக்கம்

திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கொடுத்த ஊழல் புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.   

எஸ்.பி.வேலு மணி வீட்டில் வருமான வரித்துறை சோதனை எல்லாம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. எங்களுக்கு உயிர விட மானம் தான் முக்கியம்
என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை வடவள்ளியில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. வேலுமணி உறவினர் சந்திரசேகர் வீட்டில் வரவு, செலவு புத்தகம் உள்பட ஆவணங்கள் சிக்கின. கோவை மாவட்ட எம்ஜிஆர் அணி நிர்வாகியாக உள்ளார் சந்திரசேகர். கோவையில் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கொடுத்த ஊழல் புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ‘’எதிர்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் அதிமுகவினரை குறிவைத்து சோதனை நடத்தப்படுகிறது. காவல்துறையினரை ஏவிவிட்டு அதிமுகவை களங்கப்படுத்த முயற்சி நடந்து வருகிறது. எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தவறு என நீதிமன்றத்தில் நிரூபிப்போம்’’என அவர் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!