"டிஜிபி சத்யநாராயணாவிடம் எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை.. என்னிடம் ஆதாரம் உள்ளது" - டிஐஜி ரூபா பேட்டி!!

 
Published : Jul 13, 2017, 11:54 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
"டிஜிபி சத்யநாராயணாவிடம் எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை.. என்னிடம் ஆதாரம் உள்ளது" - டிஐஜி ரூபா பேட்டி!!

சுருக்கம்

dig rupa pressemeet about sasikala issue

பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக சிறைத்துறை டிஐஜி ரூபாய் கூறியுள்ளார். 

கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக ரூபா அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அவர் கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளுக்குச் சென்று பல புதிய நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்ற ரூபா அங்கு ஆய்வு நடத்தினார். அப்போது சசிகலாவுக்கு ஜெயிலில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்திருப்பதும், அவருக்கு சமையல் செய்து கொடுக்க சில கைதிகள் நியமிக்கப்பட்டிருப்பதையும் ரூபா கண்டுபிடித்தார்.

இது தொடர்பாக சிறை அதிகாரிகள், ஊழியர்கள், கைதிகள் உள்ளிட்டோரிடம் ரூபா விசாணை நடத்தி அதை பதிவு செய்துள்ளார். அப்போது சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுக்க, கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணாவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக ரூபாவுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து ரூபா கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணாவுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதி செய்து கொடுக்க தாங்கள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறதே இது உண்மையா? அப்படி இல்லை என்றால் அது குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பரப்பரன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சலுகைகள் எதும் தரவில்லை என்று கூறினார். சசிகலா இருக்கும் சிறையில் தனியாக சமையல் அறை எதுவும் அமைக்கப்படவில்லை என்று டிஜிபி சத்யநாராயணா மறுப்பு தெரிவித்து பேட்டி அளித்துள்ளார்.

இந்த நிலையில், சிறைத்துறை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள ரூபா, பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், 

டிஜிபி சத்யநாராயணாவிடம் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி ஏதும் இல்லை எனவும், இதனால் எனக்கு லாபம் ஏதும் இல்லை எனவும் ரூபாய் கூறினார். 

டிஜிபி சத்யநாராயணா, லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் உள்ளதாகவும், இது குறித்து அரசு தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் சிறைத்துறை அதிகாரி ரூபாய் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!