
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில், அதிமுக பொது செயலாளர் சசிகலாவுக்கு சமையல் அறை வசதி செய்தது கொடுக்கப்பட்டுள்ளது என கூறி சர்ச்சையைக் கிளப்பினார், கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா.
அதற்கு அம்மாநில சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இவர் மடடுமன்றி சசிகலா ஆதரவாளர்களும் இது திட்டமிட்ட சதி என்றும் வேறு ஏதோ காரணத்திற்காக திட்டம்போட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், சசிகலாவுக்கு போட்டியாக செயல்படும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மாஃபா. பாண்டியராஜன் ஆகியோர், ஒரு பெண்ணுடன் பவ்வியமாக நிற்கும் புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகி பரபரப்பையும் சூட்டையும் கிளப்பியுள்ளது.
சிறைத்துறை டிஐஜியான ரூபா, ஐ.பி.எஸ். அதிகாரியாவதற்கு முன்பு, மாடல் அழகியாகவும் இருந்துள்ளார். தாவணாகரேவில் நடைபெற்ற மாடல் அழகிப்போட்டியில் பங்கேற்று மிஸ் தாவணாகரே பட்டமும் வென்றவர்.
இவரது சகோதரியும் ஒரு ஐ.ஆர்.எஸ். அதிகாரியாவார். பெற்றோரும் மிக உயர்ந்த பதவியில் இருந்ததால், இக்குடும்பத்திற்கு பல விஐபிக்களின் தொடர்பு ஏற்கனவே இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வத்துடன் புகைப்படத்தில் இருக்கும் பெண் ரூபாதான் என அடித்துக் கூறுகின்றனர் அதிமுக அம்மா அணியின் ஆதரவாளர்கள். ரூபா போன்ற உருவத்தோடு இருக்கும் பெண், ஓ.பி.எஸ்.
உடன் நட்பு வட்டாரத்தில் இருப்பதால், இவர்கள் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு சூழ்ச்சி நாடகத்தை நடத்துவதாக நம்புகின்றனர் அம்மா அணியினர். இந்த புகைப்படம் குறித்த உண்மை நிலவரத்தையும், விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேபோன்று, ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, கிரிக்கெட் வீரர் அசாருதீன் உள்ளிட்ட விஐபிக்களுடன் உள்ள புகைப்படங்களும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக அம்மா அணியினர் குற்றம் சாட்டுவதுபோல், ஓ.பன்னீர்செல்வத்துடன் புகைப்படத்தில் இருப்பது, ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவாக இருந்தால், இனி தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.