உச்சத்தில் டீசல் விலை ! மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது!! அத்தியாவசிப் பொருட்கள் விலை உயரும் ஆபத்து !!

First Published Dec 29, 2017, 7:45 AM IST
Highlights
Diesel price Increased in three years


தமிழகத்திலும், மேற்கு வங்க மாநிலத்திலும்  கடந்த  3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டீசல் விலை மிகக் கடுமையாக உய்ர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிப் பொருட்களின் விலை உயரக்கூடிய பேராபத்து ஏற்ப ட்டுள்ளது.

இது தொடர்பாக பெட்ரோலியத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு 5.8%-இல் இருந்து 4.5%-ஆக குறைந்துள்ளது  என்றும்  எண்ணெய் நுகர்வில் உலகின் மூன்றாவது பெரிய நாடான இந்தியா, 2018 மார்ச் மாதத்திற்குள் 203.4 மில்லியன் டன்கள் எண்ணெய் பொருட்களை பயன்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



ரஷ்யா மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் உற்பத்தியை குறைத்ததன் எதிரொலியாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் கடந்த 6 மாதங்களில் 42% அளவு கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, பேரலுக்கு 65 டாலர்களாக விற்பனை செய்யப்படுகவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

கச்சா எண்ணெய் பொருட்களின் விலை வீழ்ச்சி அடையாமல் இருக்க தினமும் 1.8 மில்லியன் பேரல்கள் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு பெட்ரோலிய பொருட்களின் விலையில் ஏற்பட்டது போன்ற மாபெரும் வீழ்ச்சி ஏற்படாமல் இருக்கும் வகையில் பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் உற்பத்தியை குறைத்துள்ளன. இதே நடைமுறையை 2018ம் ஆண்டு இறுதி வரையும் கடைபிடிக்க அந்த நாடுகள் முடிவெடுத்துள்ளதாகவும் பெட்ரோலியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



அமெரிக்காவை தாக்கிய சூறாவளிக்காற்றால் எண்ணெய் சுத்திகரிப்பாலைகள் மூடப்பட்டதை அடுத்து ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த, கடந்த அக்டோபர் 4ம் தேதி கலால் வரியை ரூ.2 வரை குறைத்தது மத்திய அரசு. 

தன்னுடைய தேவையில் 82% அளவு பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்யும் இந்தியாவில் சர்வதேச நிலவரம் பெரிதும் எதிரொலிக்கும் என்பதால், மத்திய மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்களின் மீதான வரிகளை மக்களை பாதிக்காத வகையில் மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என அந்தஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



பெட்ரோலிய பொருட்களின் விலையில் கிட்டத்தட்ட பாதியளவு மத்திய-மாநில அரசுகளின் வரியே உள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கையைத் தொடர்ந்து வாட் உள்ளிட்ட மாநில வரிகளை குறைத்த குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் எரிபொருள் விலை சற்று குறைந்து காணப்பட்ட போதிலும், பிற மாநிலங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். 

சென்னையைப் பொறுத்தவரை,  டீசல் விலை ரூ.62.65 -க்கு  விற்பனை செய்யப்படுகிறது. இது, கடந்த 2014 செப்டம்பருக்கு பிறகான மிக அதிக தொகை என கூறப்படுகிறது. . சரக்கு போக்குவரத்திற்கு அடிப்படையான டீசல் விலை உயர்ந்துள்ளதால்  அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

 

click me!