பூட்டிய கோயிலுக்குள் சத்ரு சம்ஹார யாகம் செய்தாரா எஸ்.பி.வேலுமணி..? திருச்செந்தூர் விசிட்டின் மர்மம் என்ன..?

By Thiraviaraj RMFirst Published Aug 12, 2021, 10:46 AM IST
Highlights

திருச்செந்தூர் வருகையில் வேறொரு ரகசியம் இருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையிட்ட போதும் முக்கிய ஆவணங்கள் சிக்கவில்லை.

ரெய்டு நடந்த 10ம் தேதியே திருச்செந்தூர் சென்று வழிபாடு நடத்த இருந்தேன். அன்று ரெய்டு நடந்ததால் என்னால் வரமுடியவில்லை. ஆகையால் இன்று (11.08.2021) திருச்செந்தூர் வந்துள்ளேன் என தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் எஸ்.பி.வேலுமணி. ஆனால் கோயில் பூட்டியிருக்கும்போது எப்படி அங்கு தரிசனம் செய்திருப்பார் எஸ்.பி.வேலுமணி? அவரது திருச்செந்தூர் வருகையில் வேறொரு ரகசியம் இருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையிட்ட போதும் முக்கிய ஆவணங்கள் சிக்கவில்லை.

சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு உதவியாளர் ராதாவுடன் நேற்று காலை சென்றார். பிஎம்டபிள்யூ சொகுசு காரில் அவர்கள் ஏறிச் சென்றனர். அவர்கள் எங்கு சென்றனர் என உளவுத்துறையினர் ஒரு பக்கம், போலீசார் ஒரு பக்கம் என விசாரித்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு மீண்டும் வேலுமணி வந்தார். முன்னதாக திருச்செந்தூர் சன்னதி தெருவில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்திற்கு வேலுமணி சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே அவரது குடும்பத்தினர் கோவையில் இருந்து கார் மூலம் வந்து காத்திருந்துள்ளனர். அங்கு நடந்த பரிகார பூஜை மற்றும் சத்ரு சம்ஹார யாகம் ஆகியவற்றில் வேலுமணி கலந்து கொண்டு விட்டு, விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றதாகவும், அவரது குடும்பத்தினர் தனியாக கார் மூலம் கோவை புறப்பட்டு சென்றுள்ளனர். இதற்காக திருச்செந்தூரை சேர்ந்த ஒரு விஐபி உதவி செய்ததாக கூறப்படுகிறது.

 

ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, ‘’தான் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று வந்ததாக அவரே தெரிவித்தார். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து பெரிய கோயில்களும் மூடப்பட்டுள்ளன. திருச்செந்தூரிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை. எனவே மூடப்பட்ட கோயிலில் முன்னாள் அமைச்சர் எப்படி தரிசனம் செய்திருக்க முடியும்? என்கிறார்கள். ஆனால் அவர் தூத்துக்குடியில் இருந்து குற்றாலம் பகுதிக்கு சென்று, அங்கு முக்கிய பிரமுகரை சந்தித்து அவரிடம் தான் பையில் வைத்திருந்த முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக கொடுத்துச் சென்றதாகவும் கூறுகிறார்கள். 

click me!