
தனது கணவர் சாந்தகுமார் கொலை வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பிய தடா ரஹீம் மற்றும் அதை வெளியிட்ட அதன் மீடியா யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜீவஜோதி புகார் தமிழகத்தையே உலுக்கிய பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு தொடர்பாக மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு பிரின்ஸ் சாந்தகுமார் மற்றும் ஜீவஜோதி ஆகிய இருவர் கடத்தி செல்லப்பட்டு சாந்தகுமார் கொலை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. மேலும் இந்த கொலைக்கு சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தான் காரணம் என பிரின்ஸ் சாந்தகுமாரின் மனைவி பரபரப்பு புகார் அளித்திருந்தார்.
ராஜ கோபாலுக்கு தண்டனை வாங்கி தந்தேன்..
இந்த புகார் தொடர்பாக கீழமை நீதிமன்றம்,உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் வரை வழக்குகள் நடைபெற்று சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகள் என அனைத்து நீதிமன்றங்களும் உறுதி செய்து ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. தண்டனை காலத்திலேயே உடல்நலக்குறைவு ஏற்பட்டு ராஜகோபால் மரணமடைந்தார். இந்த நிலையில் வழக்கில் முக்கிய நபராக இருந்த ஜீவஜோதி தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார், இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜீவ ஜோதி, கடந்த 2001ஆம் ஆண்டு கூலி படையை ஏவி தனது கணவரை கொன்றதாக சரவண பவன் ராஜகோபால் மீது வழக்கு தொடர்ந்து, போராடி உச்சநீதிமன்றம் வரை சென்று ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை பெற்று கொடுத்தேன்.
இதையும் படியுங்கள்: நீதி மன்றத்தையே கடுப்பாக்கிய பாஜக கல்யாண ராமன்.. இவர் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா..? கொந்தளித்த நீதிபதி.
சரவணபவன் அதிபருடன் குடும்பம் நடத்தினேனா.?
இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி ஆதன் தமிழ் என்ற யூடியூப் சேனலில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளரான தடா ரஹீம் பேட்டி ஒன்று அளித்துள்ளார், அதில் ராஜகோபால் சிறையில் இருந்த போது தடாரஹீமிடம் கொலை வழக்கு குறித்து பல தகவல்கள் கூறியதாகவும், ராஜகோபால் ஜீவஜோதியுடன் மனைவி போல் வாழ்ந்து வந்து பின்னர் ஏமாற்றிவிட்டு வேறொரு நபரை திருமணம் செய்துகொண்டேன் என பல உண்மைக்கு புறம்பான தகவல்களை தடா ரஹீம் அதில் பேசியுள்ளார். மேலும் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி தடா ரஹீம் தன்னை பற்றி ஆபாசமாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் பேசி வருகிறார்.
இதையும் படியுங்கள் : தமிழச்சியின் கணவர் என்னை கைது செய்தார்.. திருமண நிகழ்ச்சியில் சொல்லிக் காட்டிய ஸ்டாலின்.. ஆடிப்போன உ.பிக்கள்
தடா ரஹீம் மீது ஆக்ஸன் எடுங்க:
இதனால் உடனடியாக தடா ரஹீம் மற்றும் இந்த வீடீயோவை பதிவேற்றம் செய்த ஆதன் மீடியா யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட வீடியோவை நீக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார். கடந்த 2001-ஆம் ஆண்டு தனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்டதையடுத்து 2006 ஆம் ஆண்டு தஞ்சாவூரை சேர்ந்த நபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தற்போது தஞ்சாவூரில் வசித்துவரும் ஜீவஜோதி தஞ்சாவூர் மாவட்ட பாஜக துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.