Jai bhim: "அன்புமணி பார்லிமென்டில் கேள்வி கேட்டியா..??" பாமகவை தூக்கி போட்டு குத்திய துணை நடிகர்..

By Ezhilarasan BabuFirst Published Nov 29, 2021, 1:45 PM IST
Highlights

அதிமுகவிலிருந்து திமுகவுக்கும், திமுகவிலிருந்து அதிமுகவுக்கு செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. இரண்டு கட்சிகளுக்கும் மாறி மாறி போய் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகிறீர்கள்.  

ஜெய்பீம் திரைப்படத்தில் குறை இருப்பதாக நடிகர் சூர்யாவை கேள்வி கேட்கும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பார்லிமென்டில்  கேள்வி கேட்டீர்களா? என நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக துணை நடிகர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  பாராளுமன்றத்தில் பெட்ரோல் விலை பற்றி பேசினீங்களா? கேஸ் விலை ஏற்றத்தை பற்றி பேசினீங்களா? அவர் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. அதேபோல் நடிகர் சூர்யவை தாக்கினால் 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் பாமக மாவட்ட செயலாளர் ஒருவர் அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ஜெய் பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல், அந்த குறிப்பிட்ட விஷயத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனாலும் பாமகவினர் அதில் திருப்தி அடைந்ததாக தெரியவில்லை. இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக துணை நடிகர் ஒருவர் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில் அவர் அன்புமணி மற்றும் அவரது தந்தை ராமதாஸை கடுமையாக விமர்சித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

நடிகர் சூர்யா மிக சிறப்பான  படங்களை கொடுத்து வருகிறார்.  அவர் எடுக்கும் படங்களில் தவறுகள் இருப்பதாக தெரியவில்லை, இப்போது ஜெய் பீம் திரைப்படம் வந்துள்ளது, இந்த திரைப்படத்தில் எந்த மதத்தைப் பற்றியோ, சாதி பற்றியோ அவர் தவறாக எதுவும் பேசவில்லை. படம் சிறப்பாக இருக்கிறது, தமிழ் திரையுலகிற்கு எத்தனையோ நடிகர்கள் வருகிறார்கள், ஒவ்வொரு நடிகரும் ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவர், மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் நாம் ஆராயக் கூடாது. நடிகர்களை பொறுத்தவரையில் சாதி, மதம், இனம், வேறுபாடு கிடையாது. அதே போல ஆண், பெண் என இருபாலரும் வேறு வேடங்களில் நடிப்பார்கள் ஒரு பெண் தங்கையாக நடிப்பார், அம்மாவாக நடிப்பார், பெரியவரான பின் மாமியாராக நடிப்பார், அதே நேரத்தில் கள்ள காதலியாகவும் நடிப்பார்கள், சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்கு எந்த முறையும் கிடையாது. மீண்டும் சொல்கிறேன் சினிமாவை பொறுத்தவரையில் எந்த வரைமுறையும் கிடையாது. 

சினிமாவிலும் சரி, நாடகத்திலும் சரி, தெருக்கூத்தில் சரி இதுதான் நிலைமை. ஆனால் அன்பமணி இந்த ஜெய்பீம் திரைப்படத்தில் என்ன குற்றம் கண்டுபிடித்து விட்டார் என்று தெரியவில்லை. நான் அன்புமணியிடம் என்ன கேட்கிறேன் என்றால், பாராளுமன்றத்திற்கு மக்கள் உன்னை அனுப்பினார்கள், அங்கு நீ ஏதாவது கேள்வி கேட்டியா? பெட்ரோல் விலை ஏற்றத்தை பற்றி பேசினியா? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு பற்றி பேசினியா? உங்களுக்கும், உங்கள் தந்தைக்கும் இதே வேலையாக போய்விட்டது.

அதிமுகவிலிருந்து திமுகவுக்கும், திமுகவிலிருந்து அதிமுகவுக்கு செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. இரண்டு கட்சிகளுக்கும் மாறி மாறி போய் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகிறீர்கள். இதுபற்றி கேட்டால் நாங்கள் வீர வன்னியர் என்று பேசுகிறீர்கள். அன்புமணி நீங்கள் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள், ராமதாஸ் கட்சி ஆரம்பித்தபோது தேனாம்பேட்டையில் என்ன பேசினார்? எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது கட்சிக்கோ, பதவிக்கோ வந்தால் நீங்கள் சாட்டையால் அடிக்கலாம் என கூறினார். இப்போது அதைப் பற்றி பேசுகிறாயா? கூடங்குளத்தை பற்றி பேசுகிறாயா? இல்லை காவல்துறையினர் செய்யும் அடக்குமுறை பற்றிய பேசுகிறாயா? இல்லை ஏழை எளிய மக்கள் எத்தனையோ பிரச்சினைகளுக்காக அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே அதைப்பற்றி பேசிகிறாயா? ஆனால் ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவு படுத்தி விட்டார்கள் என்று பேசுகிறீர்கள். உங்கள் தந்தை ராமதாஸ் தான் எந்த சமுதாயத்தை சேர்ந்தவன் எனக்கூறி படித்தார் என்று உங்களுக்கு தெரியுமா? அதற்கான ஆதாரங்களை நான் வைத்திருக்கிறேன்.

அன்புமணி படமொன்று வந்தால் அந்த படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது, இல்லையா என்று சொல்லிவிட்டுப் போக வேண்டும். அதை விட்டுவிட்டு அந்த படத்திலேயே அவர்களை இழிவு படுத்தி விட்டார்கள் எங்களை இழிவுபடுத்திவிட்டார் என்று பிரச்சனை செய்யாதீர்கள். சூர்யா எண்ண இளிச்சவாயரா? நாங்களெல்லாம் நடிகர்கள்தான் என்று அவர் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 
 

click me!