ஆர்.கே.நகர்ல அடிச்சது அடி இல்ல.. திருவாரூரில் மரண அடி அடிக்கணும்! செம்ம பிளானோடு களமிறங்கும் தினகரன்

By sathish kFirst Published Dec 31, 2018, 8:33 PM IST
Highlights

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்ததால் காலியாக உள்ள திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு ஜனவரி 28ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இதையடுத்து, கலைஞர் மறைந்ததற்குப்பிறகு திமுக சந்திக்கும் முதல் தேர்தல் அதுவும், கலைஞர் எம்.எல்.ஏ வாக இருந்த தொகுதி என்பதால், திமுக மீண்டும் அந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்ள தாறுமாறாக களத்தில் தீயாக வேலை செய்ய காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், ஆர்.கே.நகரில், டெபாசிட்டை காலி செய்து வீட்டிற்கு அனுப்பியதைப்போல தினகரன் அதே பார்முலாவை இங்கேயும் கையாளுவாரா? இல்ல புதுசா ஏதாவது டெக்னிக் வைத்துள்ளாரா என அனைத்து கட்சியும் இப்போதே ரூம் போட்டு யோசிக்க தொடங்கியிருக்கிறது.

ஏற்கனவே அதிமுக தம்மை துரத்திய கடுப்பில் ஆர்.கே.நகரை அட்ச்சி தூக்கிய தினகரன். இப்போது தன்னுடைய வலதுகையயை ஸ்கெட்ச் போட்டு தூங்கியதால் கொல காண்டில் இருக்கும் தினகரன் ஆர்.கே.நகரில் அடித்தது அடி இல்ல, திருவாரூரில் திணற திணற மரண காட்டு காட்ட தன்னுடைய ஆதரவாளர்களுடன் பிளான் போட்டு வருகிறாராம்.

திருவாரூரை கண்டிப்பா விட்டுக்கொடுக்கமாட்டார் தினகரன்:

ஆமாம், ஜெயலலிதா மறைந்ததும் ஆர்.கே நகரில் நின்ற தினகரனுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக இரட்டை இலை சின்னம் பிடுங்கப்பட்டு தொப்பி மாட்டி அனுப்பியது தேர்தல் ஆணையம், விட்டாரா தினகரன் பண மழையை பொழியவைத்தார். தேர்தலும் தள்ளிப்போனது,  திகாருக்கும் போனார் அதிமுக வெளியில் அனுப்பியது. வெளியில் வந்த தினகரன் மீண்டும் ஆர்.கே.நகருக்கு வந்தார். இரண்டாவதுமுறை அவருக்கு கொடுக்கப்பட்ட குக்கர்.

ஸ்கெட்ச் போட்டது அதிமுகவிற்கு ஆனால் வலையில் சிக்கியது திமுக: இரண்டாவது கொடுக்கப்பட்ட குக்கரை வைத்து சத்தமாக விசில் அடித்து வெறும் டுவென்டி ரூபீஸ் நோட்டை வைத்து தட்டி தூக்கினார். ஆனால் இந்த டைம் தன்னை வெளியில் துரத்திய அதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டார் தினகரன். ஆனால் டெப்பாசிட் காலி ஆகி பரிதாபத்திற்கு ஆளானது திமுக.

இந்நிலையில் கருணாநிதியின் மரணத்திற்கு பிறகு, அந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தினகரனுக்கு மாவட்டம் தான், சொந்த ஊர் மன்னார்குடி, திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்டது . ஜெயலலிதா மரணத்தில் சசிகலா குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், சசிகலாவின் அக்காள் மகன் தினகரன், ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதி அலேக்காக வெற்றியை அள்ளினார்.

அதுமட்டுமா? தேர்தலுக்கு முந்தைய நாள் ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போல ஒரு ஆதாரத்தை கடைசி நேரத்தில் வெளியிட்டுதான் தங்கள் குடும்பம் அம்மாவிற்கு விஸ்வாசமான குடும்பம் என வெற்றியை (வீடியோ வெளியிட்ட வெற்றிவேல்) வைத்தே வெற்றி பெற்றார்.

அம்மா தொகுதிக்கே அம்மா அப்பல்லோவில் ஜூஸ் குடிக்கும் வீடியோவை வெளியிட்டு வென்ற தினகரன், சொந்த மாவட்டத்தில் உள்ள தொகுதியை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுவிடுவாரா? அதுவும் தராது இருக்கும் நிலையில் திணற திணற தோல்வியை திமுகவிற்கு பரிசளிக்க மரண வெயிட்டிங்கில் இருக்கும் தினகரன். திமுக தலைவர் கருணாநிதியின் தொகுதியில் திமுகவை ஜெயிக்க சில மாதங்களாகவே அந்த தொகுதியில் தினகரன் அணியினர் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!