உடன் பிறப்புகளுக்கு உற்சாக வாழ்த்து மழை..! பாசத்தாலேயே துவம்சம் செய்யும் ஸ்டாலின்!

Published : Dec 31, 2018, 08:03 PM IST
உடன் பிறப்புகளுக்கு உற்சாக வாழ்த்து மழை..! பாசத்தாலேயே துவம்சம் செய்யும் ஸ்டாலின்!

சுருக்கம்

 தனிமனிதர்களின் தொகுப்பான ஒரு சமூகத்துக்கும், சமூகங்களின் கூட்டான நாட்டுக்கும் அது தான் இலக்கணம். 

திமுக தலைவர் ஸ்டாலின் புத்தாண்டை ஒட்டி, கழக தொண்டர்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டு உள்ளார். அதில், 

“கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி”

01.01.2019 அன்று புத்தாண்டு பிறப்பு என்பது, புத்துணர்வு தோன்றுவது, புதிய பயணம் தொடங்குவது. அது ஆங்கில ஆண்டு மாற்றம் என்பது மட்டுமல்ல; நமது ஆளுமையின் பரிணாம வளர்ச்சி மாற்றமாகவும் முன்னேற்றமாகவும் அமைய வேண்டும். அது தனிமனிதனுக்கு மட்டுமல்ல; தனிமனிதர்களின் தொகுப்பான ஒரு சமூகத்துக்கும், சமூகங்களின் கூட்டான நாட்டுக்கும் அது தான் இலக்கணம். தொடர்ந்து அத்தகைய வளர்ச்சியை நோக்கிய உதயக்கதிரொளி பாய்ச்சுவதாகப் புதிய ஆண்டு, எங்கும் இன்பம் தரும் எல்லோர்க்கும் இனிய ஆண்டாக அமைய வேண்டும்; அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அத்தகைய தன்னம்பிக்கையுடன் புத்தாண்டை புத்துணர்வுடன் எதிர்கொள்வோம். தமிழ் நாட்டவர்க்கும், உலகத்தமிழர்க்கும், அனைத்துக்கட்சித் தோழர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், அனைவர்க்கும் எனது அன்பான ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!