பெசன்ட் நகர் டூ ஆர்.கே.நகர்... தொகுதி மக்களுக்காக வீடு வாங்கி ஷிப்ட்’டாகும்   தினகரன்... ஏசியாநெட் எக்ஸ்க்ளூசிவ்

First Published Dec 30, 2017, 1:50 PM IST
Highlights
dhinakaran shift Besant nagar to RK nagar


என்னதான் ஹவாலா ஸ்டைலில் 20 ரூபாய் நோட்டு டோக்கன், ஜெயலலிதா வீடியோ... கோடி கோடியாக கொட்டி வாங்கிய வெற்றி என்று மற்றவர்கள் சொல்லிவந்தாலும், இந்த அஸ்திரங்களை க்ளைமாக்ஸில் எடுத்து விட்டு ஆர்.கே. நகரில் அபாரமாக வென்றார் அல்லவா? அதேபோல, ஆளும் கட்சியையும், எதிர்கட்சியையும் தெரிக்கவிடும் அளவிற்கு அடுத்தடுத்த அதிரடியான மாயஜாலங்களை அரசியலில் ஏற்படுத்த ரெடியாகிவருகிறார் தினகரன்.

சட்டசபை கூட்டத்தொடர் அடுத்த மாதம்  ஆம் தேதி  கவர்னர் உரையுடன் தொடங்குவதால் தினகரன் தனது அதிரடியான பேச்சால் அரசை கடுமையாக எதிர்ப்பார் என்றும், இதுவரை எதிரி தினகரானாக பார்த்த ஆளும் கட்சியினர். புள்ளிவிவரங்களை எடுத்து இதுவரை என்னென்ன திட்டங்கள் நிறைவேறாமல் பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  மக்கள் படும் வேதனைகளை ஆதாரத்துடன் பேசி கலக்க பட்டியலை தயார்நிலையில் வைத்துள்ளாராம்.

இதற்கு முன் ஆர்.கே.நகர் தொகுதி மக்களை அடுத்த வாரம் 2 அல்லது 3-ந்தேத சந்தித்து நன்றி தெரிவிக்க முடிவு செய்துள்ளாராம். வாக்கு கடக்க போனபோது அல்லாமல் இந்தமுறை மிக பிரமாண்டமாக, மேளதாளம், தாளம் முழங்க திறந்த ஜீப்பில் தொகுதி மக்களை சந்திக்க வருவதால் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்க வீதிக்கு வீதி பெண்கள் தயாராகி வருகின்றனர். குடிமகன்களும் இப்போது குதுகலமாகியுள்ளனர். தினகரனின் வருகையால், ஆர்.கே.நகர் தொகுதி மீண்டும் 2 நாட்கள் திருவிழா போல் களைகட்ட உள்ளது.

வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தபின், ஆர்.கே.நகரில் ஒரு வீடு ஒன்றை வாங்க உள்ளாராம். இதுவரை பெசன்ட் நகரில் இருக்கும் குடியிருக்கும் தினகரன். ஆர்.கே.நகரில் ஆளும் கட்சி, எதிர்கட்சி என அனைத்தையும் மீறி வெற்றியை தந்த மக்களுக்காகவும், தொகுதியை நிரந்தரமாக தன் வசபடுத்திக்கொள்ளவும்.  அங்கேயே புது வீது ஒன்றை வாங்கி தங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோக இன்னொரு பேச்சும் இருக்கிறது, 20 ரூபாய் நோட்டுகளை மக்களுக்கு கொடுத்து, தினகரன் வெற்றி பெற்ற பின், ரூ.10 ஆயிரமாக திருப்பி தரப்படும் என தினகரன் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக ஏற்கனவே செய்தி பரவியது. இதனால் பெரும்பாலான மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கிடைக்கததால் அப்பகுதி மக்கள் கோபத்தில் இருப்பதாகவும், அதனால்தான் தினகரன் அங்கேயே சென்று மக்களை சமாதானபடுதது வதற்காகவும், பொய் சொல்லி ஓட்டை வாங்கிவிட்டு ஓடி விட்டார் என்ற அவப்பெயர் வராமல் இருப்பதர்க்ககவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

click me!