தீபாவை ஆதரிப்பவர்கள் வாயில் மண் தான் விழும் - தீரன் ஆவேசம்

 
Published : Dec 26, 2016, 04:22 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
தீபாவை ஆதரிப்பவர்கள் வாயில் மண் தான் விழும் - தீரன் ஆவேசம்

சுருக்கம்

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை ஆதரிப்பவர்கள் வாயில் மண் விழும் ,கட்சியினர் உறுதியாக இருக்கிறார்கள் என அதிமுக செய்தி தொடர்பாளர் தீரன் பிடிஐக்கு பேட்டி அளித்துள்ளார். 

இது குறித்த அவரது பேட்டி:

அரசுக்கும் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக வெளியாகும் செய்திகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்தபோது ஏற்படுத்தியதுபோல இப்போதும், ஊடகங்கள், சமூக உடகங்கள் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கின்றன என்றார்.

ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருக்கும்போதே வாரிசு அரசியலை விரும்பாததால் குடும்பத்தாரைக் கொண்டுவரவில்லை. அவர் குடும்ப அரசியலை விரும்பவில்லை. ஜெயலலிதாவின் உறவினர்களை மதிக்கிறோம்.

 தீபாவின் கருத்துக்களுக்கு அவரது அண்ணன் ஜெயகுமார் மகன் தீபக்கே பதில் சொல்லியிருக்கிறார். நாங்கள் சொல்லத் தேவையில்லை.

 கட்சியைக் குழப்பி மீன் பிடிக்கலாம் என நினைப்பவர்களின் வாயில் மண்தான் விழும். அந்த அளவு, கட்சியினர், உறுதியாக, உண்மையாக, விசுவமாக இருக்கிறார்கள்" என்று ஆவேசமாக கூறியுள்ளார்  தீரன்.
 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு