தலைமை செயலகத்தில் துணை ராணுவம்  நுழைவதா? - மாநில அரசின் உரிமை பறிக்கப்படுகிறது செங்கோட்டையன் அதிருப்தி

First Published Dec 26, 2016, 3:57 AM IST
Highlights


தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது.
 மாநில அரசுக்கு தெரியாமல் கோட்டையில் துணை ராணுவத்துடன் நுழையும் வருமான வரித்துறை நடந்துகொண்டது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என்று செங்கோட்டையன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நெறியாளர்: எம்ஜிஆர் மறைந்த போதும் கட்சி இரண்டாக பிளவுண்டது , இப்போது அதற்கான சூழல் இல்லாவிட்டாலும் கூட வருங்காலத்தில் எப்படி இருக்கும்?  
செங்கோட்டையன்: புரட்சித்தலைவர் மறைவுக்கு பிறகு 3 தலைமை ஏற்பட்டது. அன்றைக்கு தனித்தனியாக வழிநடத்தி செல்ல சிலர் இருந்தனர். இன்றைக்கு அது இல்லை. ஒரே ஒருவர் தான் இருக்கிறார். அதனால் கட்சியை யாராலும் உடைக்க முடியாது.
எம்ஜிஆர் , ஜெயலலிதா, போன்ற மாஸ் பாப்புலர் இவருக்கு  இல்லையே. இது மைனஸ் இல்லையா? 
தனி நபர் முன்னிருத்தும் நிலைபாடு அல்ல .கொள்கை அடிப்படையில் தலைமையை கொண்டு வருகிறோம். தேரை செலுத்தும் சாரதி  , கப்பலை வழி நடத்தும் மாலுமி போல் வழி நடத்தி செல்லும் சிறந்த தலைமை வலிவோடு இருந்தால் தான் அந்த இயக்கம் வலிவோடு  இருக்கும். 
ஜெயலலிதா இடத்தில் சசிகலாவை கொண்டு வருவது சிறப்பாக இருக்கிறது. வலிமையான தலைமையாக இருப்பார். 
தலைமைசெயலாளர் வீட்டில் வருமான வரிசோதனை நடக்கிறது, இவ்வளவு பெரிய கவலை அளிக்கும் சூழ்நிலையில் தமிழகத்தில் ஆட்சி  நடக்கிறது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்களே? 
மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. மாநில அரசு இருக்கும் போது அந்த அரசுக்கு தகவல் தெரிவித்திருக்கவேண்டும்.வருமான வரித்துறையினர் கோட்டைக்குள் நுழைந்து சோதனையிடுவது பற்றி  மாநில அரசின் அங்கீகாரம் இருந்திருக்க வேண்டும் , குறைந்த பட்சம்   மாநில அரசுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும், மாநில அரசின் அங்கிகாரம் இருந்திருக்க வேண்டும். 
நெறியாளர். : அவர்கள் உங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லையா?
செங்கோட்டையன் ; அதுதான் இப்ப செய்திகளாக இருக்கிறது.
நெறியாளர் : எங்கு வேண்டுமானாலும் நுழைந்து சோதனையிட வருமான வரித்துறையினருக்கு அனுமதி உள்ளதே? இதை எப்படி மாநில உரிமையாக பார்க்கிறீர்கள்? 
செங்கோட்டையன். : தனி மனிதன் வீட்டுக்கு செல்வது வேறு கோட்டைக்கு செல்வது வேறு. கோட்டையில் நுழைவதற்கு முன்னர் மாநில அரசுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும் . இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
 

click me!