அப்போல்லோவிலிருந்து வீடு திரும்பினார் தனபால்!!

 
Published : Jul 05, 2017, 04:56 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
அப்போல்லோவிலிருந்து வீடு திரும்பினார் தனபால்!!

சுருக்கம்

dhanabal discharged from hospital

சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்கு நேற்று திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சபாநாயகர் தனபாலுக்கு காய்ச்சல், மயக்கம் உள்ளிட்டவை குறித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை, முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

இந்த நிலையில், தனபாலின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அப்போலோ மருத்துவமனை தெரிவித்தது. 

சபாநாயகர் தனபால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து நேற்றும் இன்றும் சட்டப்பேரவையை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அவை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், தனபால் உடல்நிலை சீரானதை அடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

வீடு திரும்பியுள்ள தனபால், நாளை நடைபெறும் சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..