
பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை, டிடிவி தினகரன் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, கட்சி நிலவரம் மற்றும் தமிழக அரசியல் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் அதிமுக பொது செயலாளர் சசிகலாவை, கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் இன்று சந்தித்தார்.
சிறையில் இருக்கும் சசிகலாவை, கடந்த மாதம் 2 முறை டிடிவி தினகரன் சந்தித்தார். இந்த நிலையில், இன்றும் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்ற வருகிறது.
இந்த நிலையில், சிறையில் உள்ள சசிகலாவை, டிடிவி தினகரன் இன்று சந்தித்துப் பேசினார்.
அவருடன், கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி உடனிருந்தார்.
சசிகலா - தினகரன் சந்திப்பின்போது, அதிமுக நிலவரம் மற்றும் தமிழக அரசியல் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.