
அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்து செய்திதாள்களை படித்தே தெரிந்து கொண்டேன் எனவும், இணைப்பு குறித்து எனக்கு எதுவும் தெரியாது எனவும் சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந்த அதிமுக அவரது மறைவிற்கு பிறகு இரு அணிகளாக பிரிந்தது. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லவே அவரது அணியில் இருந்த எடப்பாடிக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தது.
இதையடுத்து துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டிடிவி க்கும் எடப்பாடிக்கும் சலசலப்பு ஏற்பட்டது.
இதனால் எடப்பாடி ஒபிஎஸ் பக்கம் சாய ஆரம்பித்தார். இதைதொடர்ந்து பல நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இணைப்பு பேச்சுவார்த்தை நேற்று ஒரு முடிவுக்கு வரும் என அனைவராலும் எதிர்ப்பார்க்கபட்டது.
ஆனால் கடைசி நேரம் இணையாததால் எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் தனபால், அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்து செய்திதாள்களை படித்தே தெரிந்து கொண்டேன் எனவும், இணைப்பு குறித்து எனக்கு எதுவும் தெரியாது எனவும் தெரிவித்தார்.
மேலும், அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு நல்லவிதமாகவே முடியும் என குறிப்பிட்டார்.