தேவேந்திரா குல வேளாளர் சமூகத்தின் எஸ்.சி பட்டியல் வெளியேற்றம்.. பாஜக எம்.பி ராஜீவ் சந்திரசேகர் வரவேற்பு..

By Ezhilarasan BabuFirst Published Feb 14, 2021, 3:05 PM IST
Highlights

முதல் முறையாக   தேவேந்திரா குல வேளாளர் என்ற ஒரு சமூகம், எஸ்.சி பிரிவில் இருந்து விலக்கப்பட வேண்டும் என  கோரிக்கை வைத்ததின் அடிப்படையில், ஏழு பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

முதல் முறையாக   தேவேந்திரா குல வேளாளர் என்ற ஒரு சமூகம், எஸ்.சி பிரிவில் இருந்து விலக்கப்பட வேண்டும் என  கோரிக்கை வைத்ததின் அடிப்படையில், ஏழு பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். 

அதாவது,  தமிழகத்தில் மாநில பட்டியல் இனத்தில் உள்ள  தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியார் ஆகிய ஏழு உட்பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயரிட வேண்டும் என்று அச்சமூகத்தினர் மற்றும் புதிய தமிழகம்  கட்சி மற்றும் தலித் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. 

இது தொடர்பாக கடந்த 2019ஆம்  ஆண்டு மார்ச் மாதம் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் தமிழக அரசு நியமித்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஏழு உட்பிரிவுகளை சேர்ந்தவர்களையும் இனி தேவேந்திரகுல வேளாளர் என பொது பெயர் இட வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெரிவித்தார். அதற்கு முன்னதாகவே கடந்த 2015ஆம் ஆண்டு நரேந்திர மோடி அவர்களை தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் நேராக சந்தித்து தங்களது நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தினர்.  அப்போது பிரதமர் நரேந்திர மோடி இச்சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை உணர்ந்து கொண்டதாக கூறியிருந்தார். குறிப்பாக இச்சமூகத்தினர் தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை,  தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக உள்ளனர். 

தமிழகத்தில் அரசியல் ரீதியாக மிக முக்கிய சமூகங்களில் ஒன்றாக கருதப்படும் இச்சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தமிழக அரசு தொடர்ந்து  கூறிவந்தது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த பரிந்துரையை ஏற்று, இந்த 7 பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பொதுப்பெயர் இட வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை, மக்களவையில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் இந்த மசோதா தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அமர்வில் விவாதத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அவைகளில் விவாதத்திற்குப் பின் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்ற பின் சட்டமாகும். 

இந்நிலையில் இச்செய்தியை மேற்கோள்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள  பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் தேவேந்திரகுல வேளாளர் என்ற சமூகம் எஸ்.சி  பிரிவிலிருந்து  நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை  வைத்திருப்பதும்,  அதை ஏற்று ஏழு பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குள வேளாளர் என அழைக்கும் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல்  செய்யப்பட்டு இருப்பதும் வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார். 
 

click me!