தடுப்பூசி வந்திருந்தாலும், கொரோனாவிற்கு எதிரான நமது போர் தொடரும்.. பிரதமர் மோடி...!

By vinoth kumarFirst Published Jan 16, 2021, 11:37 AM IST
Highlights

தடுப்பூசியை உருவாக்கி இருப்பது இந்தியாவின் அறிவாற்றலை உலகிற்கு வெளிப்படுத்தி உள்ளது. மனித குலம் நினைத்துவிட்டால், அதனை சாதிப்பது இயலாத காரியம் அல்ல என  பிரதமர் மோடி  கூறியுள்ளார். 

தடுப்பூசியை உருவாக்கி இருப்பது இந்தியாவின் அறிவாற்றலை உலகிற்கு வெளிப்படுத்தி உள்ளது. மனித குலம் நினைத்துவிட்டால், அதனை சாதிப்பது இயலாத காரியம் அல்ல என  பிரதமர் மோடி  கூறியுள்ளார். 

உலகின் மிக மிகப் பிரமாண்டமான கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி,  காணொலி வழியாக தொடங்கி வைத்தார். பேசுகையில்;- நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி. சரியான நேரத்தில் நமக்கு தடுப்பூசி கிடைத்துள்ளது. குறைந்த காலத்தில் இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள், மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

தடுப்பூசி மருந்துக்காக அனைத்து விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் உழைத்துள்ளனர். விஞ்ஞானிகள் உழைப்பால் குறைந்த காலத்தில் 2 தடுப்பூசி கிடைத்துள்ளது. உலகம் முழுதும் தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகியுள்ளது. தடுப்பூசியை உருவாக்கி இருப்பது இந்தியாவின் அறிவாற்றலை உலகிற்கு வெளிப்படுத்தி உள்ளது. மனித குலம் நினைத்துவிட்டால், அதனை சாதிப்பது இயலாத காரியம் அல்ல. நாட்டு மக்களின் நலனுக்கு உழைக்கும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்கும். முதல் கட்டமாக அடுத்த 2-3 மாதங்களில் 3 கோடிபேருக்கு தடுப்பூசி போடப்படும். முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்.

இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகள் வெளிநாடுகளில் தயாராகும் தடுப்பூசிக்கு எந்த வகையிலும் தரம் குறைந்தவை அல்ல. இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை, வதந்திகளை நம்பவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். உலகிலேயே இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் தான் மிகவும் விலை குறைவானது. இந்தியாவின் திறமை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியா தயாரித்துள்ள தடுப்பூசிகள் நமது கால சூழல் உள்ளிட்ட அனைத்திற்கும் ஏற்றது.

தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்திருந்தாலும், கொரோனாவிற்கு எதிரான நமது போர் தொடர்கிறது. 2 டோஸ் தடுப்பூசி போடுவது கட்டாயம். ஒரு மாத கால இடைவெளியில் இரண்டு டோஸ்களை செலுத்தி கொள்ள வேண்டும். முதல் டோஸ் போட்டவுடன், மாஸ்க்குகளை கைவிடக்கூடாது. சமூக இடைவெளியை கடைபிடிப்பதை தொடர வேண்டும். இரண்டாவது டோஸ் போட்ட உடன் தான் எதிர்ப்பாற்றல் நமது உடலில் உருவாகும்.கொரோனாவுக்கு எதிரான போரில், நமது வெற்றியை தடுப்பூசி உறுதிப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

click me!