
தமிழக விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி ஜந்தர்மந்தரில் போராடும் தமிழக விவசாயிகளை அதிமுக எம்.பி.யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று சந்தித்தார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். தொழிலதிபர்கள் கடனை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, உணவு தரும் விவசாயிகள் கடனை ஏன் ரத்து செய்யக் கூடாது. நதிகளை இணைக்கவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்."
"இந்த நியாமான கோரிக்கைகளுக்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது. விவசாயிகளின் எண்ணத்தை நாடாளுமன்றத்தில் அதிமுக எழுப்பும். எனவே விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும். நான் வகிக்கும் துணை சபாநாயகர் பதவி எளிதான ஒன்றா? முதல் அமைச்சர் பதவிக்கு இணையான ஒன்று. அதனால் முதல்வர் இங்கு வர வேண்டிய அவசியம் இல்லை.”இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார்.