துணை முதல்வர் பதவி கேட்டு மருமகன் கிடுக்குப்பிடி... முதல்வர் மாமனார் விடாப்பிடி..!

By Thiraviaraj RMFirst Published Jun 9, 2021, 3:52 PM IST
Highlights

பதவி ஏற்றால் துணை முதல்வர். இல்லையென்றால் எம்.எல்.ஏ., பதவியை வேண்டாம் என்ற உறுதியோடு இருக்கிறாராம். மாமனார்-மருமகன் ஆடும் கண்ணாமூச்சு ஆட்டத்தால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அவர்களது சொந்த கட்சியினரே புலம்பி வருகிறார்கள்.

ஒரு உறையில் இரண்டு கத்தி இருக்க முடியாது என்பது எப்படி நிதர்சனமோ..? புதுச்சேரி அரசில் இரண்டு அதிகார மையங்கள் இருக்கக் கூடாது என்பதில் ரங்கசாமி உறுதியாக இருக்கிறார்.

புதுச்சேரியில் மாமனார் ரங்கசாமி முதல்வராகிவிட்டார். அதே கூட்டணியில் இருக்கும் மருமகன் துணை முதல்வர் பதவிக்கு முட்டி மோதுகிறார். சொந்தமாக இருந்தாலும் அரசியல் சதுரங்கத்தில், ஒருவர் மட்டுமே அதிகார மையமாக இருக்க வேண்டும். இதில் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இடமில்லை என்பதில் ரங்கசாமி உறுதியாக இருக்கிறாராம். இதனால் தான், புதிய அமைச்சரவை அமைக்காமல் தாமதத்துக்கு காரணமாக இருக்கிறது.  துணை முதல்வர் பதவியை உருவாக்கி, தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொள்ள விரும்பவில்லை.

மேலும், மத்திய அரசிடம் வலிய சென்று துணை முதல்வர் பதவி ஒன்றை புதுச்சேரிக்கு ஒதுக்கி ஆணை கொடுக்க வேண்டும் என்றும் கேட்க மறுக்கிறாராம்.  பாஜக தரப்பிடம், உங்கள் மத்திய அரசு தானே... துணை முதல்வர் என்ற பதவி வேண்டும் என்று நீங்களே கேளுங்கள்... புதிதாக உத்தரவு போட்டு வாங்கிட்டு வாங்க... அந்த பதவியை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறாராம். இதனால் மருமகன் உச்ச கோபத்தில் இருக்கிறாராம். 

பதவி ஏற்றால் துணை முதல்வர். இல்லையென்றால் எம்.எல்.ஏ., பதவியை வேண்டாம் என்ற உறுதியோடு இருக்கிறாராம். மாமனார்-மருமகன் ஆடும் கண்ணாமூச்சு ஆட்டத்தால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அவர்களது சொந்த கட்சியினரே புலம்பி வருகிறார்கள்.
 

click me!