புறப்பட்டது பாஜக கோட்டையை நோக்கி.. மக்கள் போராட்டம் மாபெரும் வெற்றி.. புளங்காகிதம் அடையும் அண்ணாமலை.

By Ezhilarasan BabuFirst Published Jun 1, 2022, 12:12 PM IST
Highlights

புறப்பட்டது பாஜக கோட்டையை நோக்கி என்றும், நிரம்பி வழிந்தது ராஜரத்தினம் ஸ்டேடியம், என்றும் தெரிவித்துள்ள பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை நிற்க இடமில்லாமல் அருகிலிருந்த தெருக்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலை அலையாக திரண்டது, 

புறப்பட்டது பாஜக கோட்டையை நோக்கி என்றும், நிரம்பி வழிந்தது ராஜரத்தினம் ஸ்டேடியம், என்றும் தெரிவித்துள்ள பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை நிற்க இடமில்லாமல் அருகிலிருந்த தெருக்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலை அலையாக திரண்டது, பாஜகவின் மக்கள் போராட்டத்திற்கு மகத்தான ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கும் கட்சியின் நிர்வாகிகளுக்கும்  என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

மக்களுக்காக போராட்டம் நடத்தி புறப்பட்டது பாஜக கோட்டையை நோக்கி.., இனி மக்களுக்கான இந்த பயணம் தொய்வின்றி தொடரும்.  திமுக தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது, கோட்டை விட்டதை சொன்னவுடன்  முதலமைச்சர் கோட்டையை விட்டு மயிலாடுதுறை கிளம்பிவிட்டார். மத்திய அரசு, இரண்டு முறை பெட்ரோல் டீசல் மீதான வரி குறைப்பு அமல் படுத்தியும், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை பாக்கி என்றி முழுமையாக மத்திய அரசு கொடுத்த பிறக்கும் இன்னமும் தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுபற்றி தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி வந்த போதும் தமிழக அரசு நம் கோரிக்கைகளை எல்லாம் கேளாத செவியில், ஊதிய சங்காக, செயலின்றி இருக்கிறது. நாம் தமிழக அரசிடம் புதிதாக ஏதும் கேட்கவில்லை, அவர்கள் கடந்த தேர்தலில் தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந்த வாக்குறுதிகளை மட்டும் தான் நிறைவேற்ற சொல்கிறோம். 

திமுக தனது தேர்தல் அறிக்கைகளை, சினிமா நோட்டீஸ் போல அச்சடித்து விநியோகித்து விட்டு, அது பற்றி அக்கறை இல்லாமல் இருப்பது மக்களை அவமதிக்கும் செயலாகும். திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்கள் தேர்தல் அறிக்கையை எழுதியவர் டி ஆர் பாலு தான் ஆகவே டி ஆர் பாலு தான் பதில் அளிக்க வேண்டும், முதலமைச்சருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று விஞ்ஞான பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காததால் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக இவர் பேச தொடங்கிவிட்டார் என்று நினைக்கிறேன்.

சென்னையில் தொடங்கிய இந்த போராட்டம் தமிழக முதல்வருக்கு அறிவுருத்த நடத்தி காட்டப்பட்டிருக்கிறது. இனியும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக நடைபெறும். பெட்ரோல் விலை குறைப்பு வரும்வரை இந்த போராட்டம் நிற்காது. சென்னையில் சாதனை அளவாக, கொளுத்தும் வெயில் சுட்டெரிக்கும் போதும்,  இத்தனை பெரிய போராட்டத்திற்கு ஆதரவு தந்த பொதுமக்களுக்கு பாஜக நிர்வாகிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
 

click me!