திமுகவில் அதிரடி மாற்றம்.. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..!

Published : Jun 01, 2022, 11:16 AM IST
திமுகவில் அதிரடி மாற்றம்..  பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..!

சுருக்கம்

திமுக நிர்வாக வசதிக்காகவும்-கட்சி பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் நிர்வாக வசதிக்காக திமுகவின் மாவட்ட ஒன்றியங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில்;- திமுக நிர்வாக வசதிக்காகவும்-கட்சி பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி மதுரை தெற்கு மாவட்டம், தர்மபுரி கிழக்கு மாவட்டம், தர்மபுரி மேற்கு மாவட்டம், விழுப்புரம் மத்திய மாவட்டம், வேலூர் கிழக்கு மாவட்டம், திருப்பூர் தெற்கு மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தஞ்சை வடக்கு மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம், விருதுநகர் வடக்கு மாவட்டம், திருநெல்வேலி மத்திய மாவட்டம், திருவள்ளூர் மத்திய மாவட்டம், திருவள்ளூர் கிழக்கு மாவட்டங்களில் ஒன்றியங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டுள்ளது என துரைமுருகன் அறிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!