
டெங்கு காய்ச்சல் குறித்து எச்சரிக்கை விடுத்தது வீணாக போய்விட்டது என்றும் அதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத அரசு அகல வேண்டும் என்றும் நடிகர் கமல் ஹாசன், டுவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வெகு வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
டெமங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதார துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறி வருகின்றனர். ஆனாலும், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசன், டெங்கு காய்ச்சலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத அரசு அகல வேண்டும் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். டெங்கு காய்ச்சல் குறித்து நான் எச்சரிக்கை விடுத்திருந்தேன் ஆனால் அது வீணாக போய்விட்டது என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு டுவிட்டர் பதவில், அரசு தூங்குவதாகவும், பெற்றோரே விழித்திருங்கள், இனி காவலர் நாம்தான் என்றும், கேள்விக்கான பதிலை பெறவேண்டும் என்றும் நடிகர் கமல் ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.