தினகரனுக்கு சம்மன் வழங்கியது டெல்லி போலீஸ் - கதிகலங்கியது அதிமுக அம்மா அணி...

First Published Apr 19, 2017, 11:45 PM IST
Highlights
delhi police submit to summon ttv dinakaran


இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் அதிமுக துணைப்பொதுச் செயலாளர் தினகரனுக்கு டெல்லி போலீசார் சம்மன் வழங்கினர்.

அதிமுக இரண்டாக பிரிந்தையால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. பின்னர், இரட்டை இலையை மீட்போம் என தினகரன் தரப்பும், ஒ.பி.எஸ் தரப்பும் மாறி மாறி கூவி வந்தனர்.

இதை தொடர்ந்து தினகரன் ஒரு படி மேலே சென்று தேர்தல் ஆணயத்தையே வளைத்து போட முடிவு செய்துள்ளார்.

டெல்லி விடுதி ஒன்றில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் இருந்து 1.50 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது இரட்டை இலை சின்னத்தை பெற அதிமுக அம்மா கட்சியின் சார்பில் துணை பொதுச்செயலாளர் தினகரன் ரூ.60 கோடி தர முன்வந்தது தெரியவந்தது.

சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரன் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகேஷை 8 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் சென்னை வந்தனர்.

சென்னை வந்த போலீசார் அடையாரில் உள்ள தினகரன் வீட்டிற்கு சென்று சம்மன் அளித்தனர்.

அப்போது தினகரனிடம் பெரிதாக கேள்விகள் ஏதும் கேட்கப்பட்டதாக தெரியவில்லை. ஆனால் நாளை காலை விசாரணை மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

click me!