
கட்சியில் இருந்து டிடிவி தினகரன் ஒதுங்குகிறேன் என கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
எடப்படியின் ஆட்சியில் தினகரனின் ஆதிக்கம் அதிகம் இருந்ததால் அவரை கட்சியில் இருந்து ஒதுக்க எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது.
இந்த முடிவை அதிகாரபூர்வமாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடையே அறிவித்தார்.
இதையடுத்து டிடிவி தினகரனும் ஒதுங்கி கொள்வதாக அறிவித்தார். அமைச்சர்கள் ஏதோ ஒரு பயத்தின் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளனர்.
நான் விலகினால் கட்சி நன்றாக இருக்குமென்றால் நான் விலகி கொள்கிறேன். இதுவரை என்னுடன் ஒத்துழைத்த கழக நிர்வாகிகளுக்கு நன்றி என தெரிவித்திருந்தார் டிடிவி தினகரன்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கட்சியில் உள்ள கருத்து வேறுபாடுகளை களையவே இரு அணிகள் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கட்சியில் இருந்து டிடிவி தினகரன் ஒதுங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழக முதலமைச்சரை மாற்றுவதற்கான எந்த அவசியமும் இல்லை.
இரு அணிகளும் இணைந்து ஆக்கபூர்வமாக செயல்படுவோம்.
பொது வாழ்வில் யாரும் மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டார்கள்.
சசிகலா சிறையில் இருப்பதால் செயல்பட முடியாத நிலையில் இருக்கிறார்.
தேவை ஏற்பட்டால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.