
எக்காரணம் கொண்டும் ஒ.பி.எஸ்க்கு முதல்வர் பதவி தரக்கூடாது என கர்நாடக அதிமுக அம்மா செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
பன்னீர்செல்வத்திற்கு சசிகலா கொடுத்த அதே நெருக்கடியை எடப்பாடிக்கு டிடிவி தினகரன் கொடுத்ததால் தினகரனை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்தது எடப்பாடி அமைச்சரவை.
இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முதலமைச்சரின் ஒப்புதலோடு அறிவித்துள்ளார்.
தொடர்ந்து சசிகலாவால் பிரிந்து சென்ற ஒ.பி.எஸ்சுடன் இணைய தயாராக இருப்பதாகவும் எடப்பாடி அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கான குழு ஒ.பி.எஸ் தரப்பில் நாளை அறிவிக்கப்பட உள்ளது.
அமைச்சர்களின் இத்தகைய முடிவுக்கு தான் எவ்வித இடையூறும் செய்யபோவதில்லை எனவும் நான் விலகினால் கட்சி நல்ல இருக்கும் என்றால் நான் ஒதுங்கி கொள்கிறேன் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் கர்னாடக அதிமுக அம்மா செயலாளர் புகழேந்தி சந்தித்து பேசினார். பின்னர், புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
எக்காரணம் கொண்டும் ஒ.பி.எஸ்க்கு மீண்டும் முதல்வர் பதவி தரக்கூடாது.
நல்ல முறையில் கட்சி செயல்பட்டு கொண்டு வந்தது. அமைச்சர்கள் அவரச பட்டுவிட்டார்கள்.
கட்சியின் தலைமை தினமும் தலைமை கழகத்திற்கு வந்தார்கள், தொண்டர்களை சந்தித்தார்கள்.
அம்மாவின் அனைத்து வாக்குறுதிகளையும் நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள்.
தினகரனை விலக்கியதால் மனம் புண்பட்டாலும் அவரது செயல்பாடுகள் உயர்வாக உள்ளது.
சசிகலாவை குடும்பத்தை பற்றி தம்பிதுரை பேசுவது ஏற்புடையது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.