சூடுபிடிக்கும் ஃபெரா வழக்கு... தினகரன் மனு வாபஸ்

First Published Apr 19, 2017, 4:57 PM IST
Highlights
dinakaran withdraw his petition in fera case


பெரா வழக்கில் தீர்ப்பை திரும்பப் பெறக்கோரி  தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ம மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

1995 மற்றும் 1996 ஆம் ஆண்டு கால கட்டத்தில் இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் டிடிவி.தினகரன் மீது 72 கோடி ரூபாய் வைப்பு நிதி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் மீது அந்நிய செலாவணி தொடரப்பட்டது.  இவ்வழக்கில் இருந்து டிடிவி தினகரன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விடுவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து அமலாக்கத்துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து மறுவிசாரணை நடத்த சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தினகரன் தரப்பில்  வழக்கு தொடரப்பட்டது.

இதற்கிடையே அந்நிய செலாவணி வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தினகரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பெரா வழக்கில் தீர்ப்பை திரும்பப் பெறக் கோரி தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தினகரன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

click me!