டெல்லி - லாகூர் தொடர்பு துண்டிப்பு...நாங்களும் ரெடி. உச்சகட்ட அலர்ட்-ல் இந்தியா...

By Selvanayagam PFirst Published Aug 13, 2019, 8:48 AM IST
Highlights

இந்தியா பாகிஸ்தான் இடையே சம்ஜோதா ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து டெல்லி  லாகூர்  இடையேயான பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் இந்தியா உடனான அனைத்து ராஜாங்க உறவுகளையும் முறித்துக்கொண்டது. 

இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் இடையே இயக்கப்பட்டு வந்த சம்ஜோதா ரயில் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியது. இந்நிலையில் டெல்லி லாகூர் இடையே இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவையையும் நிறுத்துவதாக பாகிஸ்தான் சுற்றுலா மேம்பாட்டு கழகம் கடந்த சனிக்கிழமை அறிவித்துள்ளது. 

இதனையடுத்து டெல்லி போக்குவரத்து கழகமும் லாகூருக்கான  பேருந்து சேவையை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. 

லாகூர் பேருந்து சேவை கடந்த 1999ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது, கடந்த  2001 ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, லாகூர்  போக்குவரத்து சேவையை இந்தியா நிறுத்தியது. 

பின்னர் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் மீண்டும் போக்குவரத்து சேவை  தொடங்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை அன்று டெல்லி காலை டெல்லியில் இருந்து லாகூருக்கு 2 பயணிகளுடன் சென்ற பேருந்து, அன்று மாலையே பாகிஸ்தானிலிருந்து 19 பயணிகளுடன்  இந்தியா திரும்பியது குறிப்பிடத்தக்கது.

click me!