அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. நாளை வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். திமுக, அதிமக உள்ளிட்ட பல வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவினை தாக்கல் செய்து வருகின்றனர்.
இதனிடையே அதிமுகவின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் அதிமுகவின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு புறம்பானது, என்பதால் வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையின் போது அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்ட மனுக்களை ஏற்கக்கூடாது என்று கே.சி.பழனிச்சாமி வாதத்தை முன்வைத்தார். இதனையடுத்து கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.