
இரட்டை இலை லஞ்ச வழக்கில் டிடிவி தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகரிடம் குரல் மாதிரியை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அந்நிய செலாவணி வழக்கை விட இரட்டை இலை லஞ்ச வழக்கு டிடிவி தினகரனை ஆக்டோபஸ் கரங்களைப் போல வளைத்து சுருட்டி முற்றாக ஆக்கிரமித்துள்ளது.
கொஞ்சம் கூட மூச்சு விடாதபடி வழக்கின் இறுக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதால் திணறி வருகிறார் டிடிவி.
திகார் சிறையில் திக் பிரமை பிடித்தது போல் இருக்கும் டிடிவியை அடுத்த கட்ட சுழலுக்குள் இழுக்கும் முதற்கட்ட பயிற்சியில் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றிருக்கு டெல்லி காவல்துறை.
இரட்டை இலை லஞ்ச வழக்கில், சூத்திரதாரியான சுகேஷ் சந்திரசேகரருக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களை
கையில் வைத்திருக்கும் காவல்துறை அதனை ஊர்ஜீதப்படுத்த இருவரது குரல் பதிவுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றத்தில் அனுமதி கோரியது.
இதனை விசாரித்த நீதிபதி தீஸ் ஹசாரி, காவல்துறைக்கு கிரீன் சிக்னல் அளித்துள்ளார்.
நீதிமன்றம் பச்சை விளக்கு காட்டி விட்டது. தயாராக இருந்து கொள் என்ற படி காவல்துறையினர் மஞ்சள் விளக்கை ஒளிக்கவிட்டுவிட்டனர். எங்கும் செல்ல முடியாத படி சிகப்பு விளக்கில் சிக்கிக் கொண்டுள்ளார் டிடிவி தினகரன்