டெல்லி தேர்தல் வாக்கு பதிவு..!! காலதாமதமாக சொன்ன தேர்தல் ஆணையம்..!! கள்ள ஆட்டம் ஆட நினைக்கிறதா பாஜக...?

By Thiraviaraj RMFirst Published Feb 9, 2020, 9:51 PM IST
Highlights

டெல்லி தேர்தல் வாக்குபதிவு சதவிகிதம் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருவது எனக்கு பெரிய அதிர்ச்சி அளிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.

டெல்லி தேர்தல் வாக்குபதிவு சதவிகிதம் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருவது எனக்கு பெரிய அதிர்ச்சி அளிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.


 காங்கிரஸ் கட்சியும்  இதே  கேள்வியை எழுப்பி இருந்தது. இந்த நிலையில்  செய்தியாளர்களை சந்தித்த டெல்லி தேர்தல் ஆணையர் ரன்பீர் சிங், வாக்குப்பதிவு குறித்து விளக்கம் அளித்தார். அதில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 62.59 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. நாடாளுமன்ற தேர்தலைவிட இரண்டு சதவீதம் வாக்குகள் அதிகம் பதிவாகி உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 67.47 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருந்த‌து. அதிகபட்சமாக பல்லிமரன் தொகுதியில் 71.61 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. குறைவாக டெல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் 45.4சதவிகிதம் வாக்குகள் பதிவானது என்றார்.

நடந்து முடிந்த வாக்கு சதவீதம் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையர் வெளியிடுவதில் காலம் தாழ்த்தியது அரசியல் கட்சிகளுக்கு பல சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.பாஜக நாடாளுமன்றம் ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றுள்ள மீனாட்சிலோகு பேசும் போது..' பாஜக நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என்று சொல்லியிருப்பது மேலும் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜக கள்ள ஆட்டம் ஆடாமல் மக்கள் கொடுத்த தீர்ப்பின் உண்மையை தேர்தல் ஆணையம் பிரதிபலிக்க செய்ய வேண்டும் என்பது மக்களின் ஆசையாக இருக்கிறது. 

by- TBalamurukan

click me!