டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் டெல்லிக்கு ஆபத்து..!பதறும் டெல்லி முதல்வர் கெஜ்ரி வால்

By Thiraviaraj RMFirst Published Mar 31, 2020, 10:27 PM IST
Highlights
டெல்லி நிஜாமூதின் மத கூட்ட மையத்தில் தங்கி இருந்தவர்களால் டெல்லிக்கு கொரொனா ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல பேர் மிஸிங்க் ஆகியிருக்கிறார்கள்.இதனால் என்ன நடக்குமோ என்கிற அச்சத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் இருக்கிறார்.

T.Balamurukan

டெல்லி நிஜாமூதின் மத கூட்ட மையத்தில் தங்கி இருந்தவர்களால் டெல்லிக்கு கொரொனா ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல பேர் மிஸிங்க் ஆகியிருக்கிறார்கள்.இதனால் என்ன நடக்குமோ என்கிற அச்சத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் இருக்கிறார்.
 
டெல்லியில் காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,அப்போது பேசியவர்..,

"டெல்லியில் இதுவரை 97 பேருக்கு கொரோனா வைரஸ்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் சிங்கப்பூருக்கு சென்றிருக்கிறார். 2 பேர் பலி. இதுவரை 5 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 89 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் இருக்கிறார். இரண்டு பேருக்கு ஆக்ஸிஜன் உதவி வழங்கப்படுகிறது. மற்றவர்களின் உடல்நிலை நல்ல நிலையிலேயே உள்ளது. அனைவரும் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.

கடந்த 2-3 நாள்களில் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்தது குறித்து அரசு ஆராய்ந்தது. அதில் 24 பேர் நிஜாமுதீன் மையத்தைச் சேர்ந்தவர்கள். 41 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், 22 பேர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களுடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் என்பது தெரியவந்தது. 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது குறித்து ஆராய்ந்து வருகிறோம். நாம் சமூகப் பரவல் கட்டத்தில் இல்லை. 

மார்ச் மாத மத்தியில் நிஜாமுதீன் மையத்தில் மத ரீதியிலான கூட்டத்தில் பங்கேற்க பலர் கூடியிருக்கிறார்கள். இதில் பலர் கிளம்பிவிட்டனர். இன்னும் பலர் இங்கேயே இருக்கிறார்கள். அந்த மையத்தில் இருந்து 1,548 பேர் மீட்க்கப்பட்டு இருக்கிறார்கள். 441-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான அறிகுறி இருந்ததால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் தற்போது மருத்துவமனையில் உள்ளனர். 1,107 பேருக்கு அறிகுறி இல்லை.இருப்பினும், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது எந்த அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. அனைத்து மதத் தலைவர்களும், மக்களும் எவ்விதக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யாமல் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எந்தவொரு அலுவலரும் பொறுப்பற்றவராகக் கண்டறியப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

click me!