டெல்லியில் கெத்துகாட்டும் பாஜக..!! ஒரே நேரத்தில் 40 நட்சத்திரங்களை களமிறக்கி அதகளம் செய்யும் அமித்ஷா...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 23, 2020, 4:04 PM IST
Highlights

தங்கள் கையில் மாநில ஆட்சி இருந்தால்  டெல்லியில்  தேவையற்ற இது போன்ற சம்பவங்களை தவிர்க்க முடியும் என்பதால் டெல்லியை கைப்பற்ற பாஜக அதிக ஆர்வம் காட்டி வருகிறது. 

டெல்லி சட்டமன்ற தேர்தலில் 40 நட்சத்திர பேச்சாளர்களை ஒரே நேரத்தில்  களத்தில் இறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .  ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலை சந்திக்கும்போது பாஜக  மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிப்பது  மற்றும் வாக்காளர்களை கவரும் வகையில் புதுப்புது தேர்தல் வியூகங்களை முன்னெடுத்து  அதில் நினைத்ததைப் போல வெற்றியும் பெற்றும்  வருகிறது .  இந்நிலையில் டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது .டெல்லியில் உள்ள மொத்தம் 72 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

 பாஜக , காங்கிரஸ் , ஆம் ஆத்மி என மூன்று கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது , மத்தியில் ஆளும் தாங்களே நாட்டின் தலைநகர்  டெல்லியிலும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில்  களமிறங்கும் பாஜக எந்த கட்சியும் செய்யாத அளவிற்கு தன் தேர்தல் வியூகங்களை அமைத்துள்ளது . சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடந்த போராட்டங்கள் நாட்டையே திரும்பி பார்க்க வைத்ததுடன், இந்த போராட்டத்தை முறையாக கட்டுப்படுத்த முடியாமல் போனது என்ற ஆதங்கம் பாஜகவிடம் உள்ளது, தங்கள் கையில் மாநில ஆட்சி இருந்தால்  டெல்லியில்  தேவையற்ற இது போன்ற சம்பவங்களை தவிர்க்க முடியும் என்பதால் டெல்லியை கைப்பற்ற பாஜக அதிக ஆர்வம் காட்டி வருகிறது.    இதற்காக சுமார் 40க்கும் அதிகமான நட்சத்திரங்களை ஒரே நேரத்தில் களத்திலிறக்கி வாக்காளர்களை கவர திட்டமிடப்பட்டுள்ளது .

 

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ,  உள்துறை அமைச்சர் அமித் ஷா ,  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,  கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் ,  நடிகர் சன்னி தியோல் ,  நடிகை ஹேமாமாலினி என 40 நட்சத்திர பேச்சாளர்களை இறக்கி பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது .இது மட்டுமல்லாமல் பாஜக ஆளும் மாநிலங்களில் முதலமைச்சர்களையும்   தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்த பாஜக திட்டமிட்டுள்ளது .  அந்தவரிசையில் ஜெயராம் தாகூர் ,  மனோகர் லால் கத்தார் ,   திரிவேந்திர சிங் ராவத் , உள்ளிட்டோரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் . உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு சேகரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
 

click me!