தெளிவான - நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் 

First Published Jun 14, 2018, 5:16 PM IST
Highlights
Delayed justice is useless - M.K.Stalin


ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான-நியாயமான தீர்ப்பு விரைவில் கிடைக்க வேண்டும் என்று ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மூன்றாவது அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதியாகும் என, திமுக
செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜனநாயக மாண்பினை காப்பதில்
நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான - நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்க வேண்டும். 

தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகி விடும். அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன் என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளா

click me!