முதல்வர் குறித்து அவதூறு.. வசமாக சிக்கிய சி.வி. சண்முகம்.! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு.!

By vinoth kumar  |  First Published Mar 5, 2024, 1:08 PM IST

 கடந்த ஜூலை 20ம் தேதியன்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் தமிழக அரசையும் தமிழக முதல்வரையும் அவதூறாக பேசியதாக அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன் விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் புதிய வழக்கை தொடுத்தார்.


முதலமைச்சர், தமிழக அரசையும் அவதூறாக பேசிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். 

ஏற்கனவே தமிழக அரசை அவதூறாக பேசியதாக நான்கு  வழக்குகளில் இரண்டு வழக்குகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  மேலும் இரண்டு அவதூறு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 20ம் தேதியன்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் தமிழக அரசையும் தமிழக முதல்வரையும் அவதூறாக பேசியதாக அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன் விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் புதிய வழக்கை தொடுத்தார்.

Latest Videos

undefined

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா மதிமுக? கண்கொத்தி பாம்பாக காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி.!

இதனையடுத்து தொடரப்பட்ட புதிய வழக்கில் சம்மன்  கிடைக்கப்பெற்று இன்று விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் ஆஜரானார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதியிடம் அமைச்சரின் வழக்கறிஞர்  ராதிகா செந்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் வழக்கை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிபதி பூர்ணிமா உங்களது வாதத்தை 19ஆம் தேதி முன்வைக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணை 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க:  ஜாபர் சாதிக்கிற்கு சாதிக் பாஷா நிலைமை வந்துவிடக் கூடாது.! உயிருக்கு ஆபத்து! சி.வி.சண்முகம் பகீர்.!

click me!