ஆர்.எஸ்.பாரதி மீதான அவதூறு வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

Published : Mar 12, 2022, 06:07 AM IST
ஆர்.எஸ்.பாரதி மீதான அவதூறு வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

சுருக்கம்

கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் வேளச்சேரியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 2015ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலிலதா குறித்து அவதூறாக பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது பதியப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு

கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் வேளச்சேரியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில், தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இதையும் படிங்க;- குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் எப்போது? உண்மையை போட்டுடைத்த ஆர்.எஸ்.பாரதி..!

ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் மனுதாக்கல் 

இதனையடுத்து, வழக்கு விசாரணையில் ஒரு முதலமைச்சர் செய்ய வேண்டிய மக்கள் பணி குறித்தே பேசியதாகவும், ஜனநாயக ரீதியாக முதல்வரை விமர்சிக்க உரிமை உள்ளதாகவும், தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அவதூறு வழக்கு ரத்து

இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது போடப்பட்ட அவதூறு வழக்கை நீதிபதி ரத்து செய்து  உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க;- வாரிசு அரசியலை பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.. JP.நட்டாவுக்கு சரியான பதிலடி கொடுத்த RS.பாரதி..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!