புத்திசாலித்தனமா பேசுவதாக நினைப்பா? இந்தியாவுக்கான யுத்தம் 2024-ல் தான்.. மோடிக்கு பிரசாந்த் கிஷோர் பதிலடி.!

Published : Mar 12, 2022, 05:34 AM IST
புத்திசாலித்தனமா பேசுவதாக நினைப்பா? இந்தியாவுக்கான யுத்தம் 2024-ல் தான்.. மோடிக்கு பிரசாந்த் கிஷோர் பதிலடி.!

சுருக்கம்

தற்போது நடைபெற்று முடிந்த மாநில தேர்தல் பாஜகவின் வெற்றி. இது ஒரு வரலாற்று சாதனை. 2022 தேர்தல் முடிவுகள், 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என கூறினார்.

2024ம் ஆண்டு நடக்கப்போகும் தேர்தலை மாநில அளவிலான  தேர்தல் முடிவுடன் ஒப்பிடக்கூடாது. அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம். மக்களை ஏமாற்றும் வகையில் புத்திசாலித்தனமாக பேசுகிறார் பிரதமர் மோடி என பிரசாத் கிஷோர் கூறியுள்ளார்.

4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி

உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில், பஞ்சாப் மாநிலத்தை தவிர 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 

இந்த வெற்றி 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில், ஏழை மக்கள் பாஜக மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இந்த 4 மாநிலங்களின் தீர்ப்பே காட்டுகிறது. தற்போது நடைபெற்று முடிந்த மாநில தேர்தல் பாஜகவின் வெற்றி. இது ஒரு வரலாற்று சாதனை. 2022 தேர்தல் முடிவுகள், 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என கூறினார்.

இதையும் படிங்க;- 4 மாநில தேர்தல் முடிவுகள்.. 2024 மக்களவை தேர்தலின் தலைவிதியை தீர்மானிக்கும் ..பிரதமர் மோடி பேச்சு..

பிரதமர் மோடிக்கு பிரசாந்த் கிஷோர் பதிலடி

இந்நிலையில், பாஜகவின் வெற்றி குறித்தும், பிரதமரின் இந்த பேச்சு தொடர்பாகவும் தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக  பிரசாந்த் கிஷோர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இந்தியாவுக்கான யுத்தம் 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தான் இருக்கிறதே தவிர, மாநிலத் தேர்தலில் இல்லை. இது சாஹேபுக்கு (பிரதமர் மோடிக்கு) நன்றாக தெரியும். இருப்பினும் மிக புத்திசாலித்தனமாக இந்த தேர்தலை, அந்த தேர்தலுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இந்த தவறான கருத்துக்கு இரையாகாதீர்கள்  நம்பிவிடாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க;- காங். விரும்பினால் 2024ல் இணைந்து போட்டியிட தயார்... அழைப்பு விடுக்கும் மம்தா பானர்ஜி!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!