கையில் சிகரெட்டுடன் போஸ் கொடுத்த தீபக்!!! ஜெயலலிதாவின் இமேஜை பப்ளிக்கா டேமேஜ் செய்த அண்ணன் மகன்...

 
Published : Jun 17, 2017, 07:21 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
கையில் சிகரெட்டுடன் போஸ் கொடுத்த தீபக்!!! ஜெயலலிதாவின் இமேஜை பப்ளிக்கா டேமேஜ் செய்த அண்ணன் மகன்...

சுருக்கம்

Deepak Jayakumar exclusive photo with cigarette

’மிதமிஞ்சிய பணம் படைத்த குடும்பத்தை சேர்ந்த அலட்சியமான சென்னை பசங்க!’ என்றொரு இனம் சென்னையில் இருக்கிறது. இம்ப்போர்டட் கார், ஸ்கின் ஃபிட் பெர்முடாஸ், ஆறாவது விரலாக சிகரெட், உற்சாக நீரில் ஊறி ஊறி ஊதிய முகம், தமிழகத்துக்கு சம்பந்தமில்லாத தமிழ்... என்று இவர்களுக்கென்று பொது அடையாளங்கள் இருக்கின்றன. 

சனி இரவானால் கிழக்கு கடற்கரை சாலையில் காற்றைக் கிழித்துக் கொண்டு டிரைவ் செய்யும் இவர்களில் உயர் அதிகாரிகளின் மகன்கள், பெரிய நடிகர்களின் பசங்க, அரசியல் புள்ளிகளின் மகன்கள், பெரும் தொழிலதிபர்களின் பசங்க...என்று வகை தொகையில்லாமல் இவர்களின் எண்ணிக்கை இருக்கிறது. 

ஆனால் தீபக்கும் இவர்களில் ஒருவராக அறியப்படுவதுதான் அதிர்ச்சியளிக்கிறது? எந்த தீபக் என்கிறீர்களா! ஜெயலலிதாவின் அண்ணன் மகனான அதே தீபக்தான். 

மோஸ்ட் பாப்புலர் நடிகையாக ஜெயலலிதா நடித்து சம்பாதித்துக் குவித்திருந்த்தோடு, இந்த மாநிலத்தின் முதல்வராக அதிகார உச்சமும் சேர்ந்து கொண்ட நிலையில்   பர்ஷனல் வாழ்வில் தன்னை ஃப்ரீக்கியாக அவர் சித்தரித்துக் கொண்டதே கிடையாது. நகைகளை அள்ளிப்போட்டு,மெகா சைஸில் ஜரிகை இழைத்த புடவையில் சசிகலாவோடு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கருணாநிதி ஆட்சி ஏவிய ரெய்டின் மூலமாகதான் வெளிப்பட்டனவே தவிர அவராக வெளியிட்டு தனது ரிச்னஸை வெளிக்காட்டியதில்லை. 

ஆனால் அவரது குடும்ப ரத்த உறவுகளான தீபக்கும், தீபாவும் ஜெயலலிதாவின் பெயரை இப்போது சந்தி சிரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் தீபக்கின் போக்கு பெரும் போக்காகத்தான் இருக்கிறது. 

கடந்த ஞாயிறு அன்று போயஸ் தோட்ட இல்ல வாசலில் தீபா ஆடிய ஆட்டம் காலத்துக்கும் மறக்க முடியாதது. ஜெ.,வின் இறுதிச்சடங்குக்கு பிறகு தீபக் மிக முழுமையாக வெளிப்பட்ட நாள் அதுதான். அன்றும் சரி, அதன் பிறகு அந்த விவகாரம் தொடர்பாக அவர் பேட்டிக்கு அமர்ந்த நாட்களிலும் சரி அவரது உருவமும், பேச்சும் பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கின்றன. 

அரசு நிர்வாக ரீதியாக எவ்வளவு பெரிய வெளிநாட்டு மனிதர்களோடு ஆலோசனையில் அமர்ந்தாலும் கூட உணவில் துவங்கி, உடை வரை தனது பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்க மாட்டார். உணவில் அவ்வளவு மடியாக நடந்து கொள்வார். 
ஆனால் தீபக்கோ சமீபத்தில் செய்தி சானல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘தீபா எம்மேலே புகார் கொடுக்கட்டுமே! நானே போய் சரண்டராகி, புழலுக்கு போறேன். அங்கே சிக்கனெல்லாம் போடுறாங்களாம். அப்டியே சாப்ட்டு ஜாலியா இருப்பேன்.’ என்று தெனாவெட்டாக பேசியிருக்கிறார். இது தனது குடும்பத்தின் பெருமையையும், அடையாளத்தையும் அசைத்துப் பார்க்கும் வார்த்தைகள் என்பதை அவர் அறியாததா? அதையும் தாண்டி எந்த அலட்சியத்தில் இப்படி பேசுகிறார்! என்று அதிர்ச்சியாகிறது தமிழகம். 

இந்த விஷயம் பற்றி ஏற்கனவே விரிவாக அலசியிருக்கிறது நமது ‘நியூஸ் ஃபாஸ்ட்’ இணைய தளம். 
இந்த சூழலில் இன்று  வெளியாகியிருக்கும் புலனாய்வு வார இதழின் அட்டையில் தீபக்கின் புகைப்படம்தான் வெளியாகி இருக்கிறது. புகைப்படம் எடுக்கப்பட்ட பின்னணியை பார்க்கையில் ஏதோ வளைகுடா நாட்டில் எடுக்கப்பட்டது போல் தெரிகிறது. 

இதெல்லாம் விஷயமில்லை...ஆனால் விவகாரம் என்னவென்றால் இந்த புகைப்படத்தில் தீபக்கின் வலது கரத்தில் புகைந்து கொண்டிருக்கிறது சிகரெட். இந்த புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டதில்லை, சில வருடங்களிருக்கலாம் என்று தோண்றுகிறது. சொல்லப்போனால் ஜெயலலிதா இருந்த காலத்தில் எடுக்கப்பட்டதாகவும் இருக்கலாம். அப்போதே வேற லெவலுக்கு போய்விட்டிருக்கிறார் தீபக். 

இப்போது அவரது முகத்தையும், உருவ அமைப்பையும் பார்த்தால் அவர் அந்த லெவலையும் தாண்டி இன்னும் மோசமான லெவலுக்கு போய்விட்டதாகவே வேதனைப்படுகின்றனர் ஜெயலலிதா குடும்பத்தின் மீது பற்று வைத்திருப்போர். ஏதோ ஒரு வேண்டாத பழக்கம் தீபக்கின் உடலை மொத்தமாக ஆக்கிரமித்திருப்பதை அவரது உருவமே காட்டுவதாகவும் புலம்பித் தீர்க்கிறார்கள். 

ஜெயலலிதா தனது சொத்துக்களை வேறு யாருக்கும் உயில் எழுதி வைக்காத நிலையில், அவரது வாரிசுகளான தனக்கும், தன் அக்காவுக்குமே அந்த சொத்துக்கள் சொந்தம் என்று உரிமை பேசும் தீபக் ஜெயலலிதாவின் பரம்பரை மானத்தை மட்டும் இப்படி பப்ளிக்காக டேமேஜ் செய்வது எந்த வகையில் அடுக்கும்!

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் என்பதற்காக தீபக்கிற்கு தனிப்பட்ட சுதந்திரம் இருக்கக்கூடாதா? என்று கேட்கலாம். நிச்சயம் இருக்கலாம். ஆனால் அந்த சுதந்திரம் ஜெ.,வின் பெருமையை பெயர்த்தெடுப்பதாக அமையாமல் இருப்பது முக்கியமல்லவா! சிகரெட்டை ஊதிக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்பதும், கோடி பேர் பார்க்கும் டி.வி. பேட்டியில் சிக்கன் சாப்பிடுவேன் என்று கொக்கரிப்பதும் சரியா?

ஜெயலலிதாவின் குடும்ப கெளரவம் தீபக்கிற்கு முக்கியமில்லையென்றால், அவரது சொத்துக்களையும் தீபக் தீண்டக்கூடாது. 
 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!