அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும்… தீபா வீட்டின் முன்பு ஆவேசமாக திரண்ட தொண்டர்கள்…

Asianet News Tamil  
Published : Jan 05, 2017, 08:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும்… தீபா வீட்டின் முன்பு ஆவேசமாக திரண்ட தொண்டர்கள்…

சுருக்கம்

அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும்… தீபா வீட்டின் முன்பு ஆவேசமாக திரண்ட தொண்டர்கள்…

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக வின் பொதுச் செயலாளராக அவரது தோழி சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள், எம்.பி. க்கள், கட்சியின் நிர்வாகிகள் மட்டுமே சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அடிமட்டத் தொண்டர்கள் சசிகலாவின் வருகையை எதிர்த்து வருகின்றனர். அதே நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர்.

இதற்காக பலவித அச்சுறுத்தலையும் மீறி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தீபா அதிமுகவுக்கு தலைமை ஏற்க வரவேண்டும் என வால் போஸ்டர்களும்,பேனர்களும் வைத்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் தீபாவிற்கு ஆதரவு பெருகி வருகிறது.  அவரவர் சொந்த ஊர்களில் தொண்டாகள் வைத்து வரும் தீபா ஆதரவு பேனர்கள் அதிமுகவினரிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் தீபா வசித்து வரும் சென்னை தியாகராயநகர் வீட்டிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து குவியத் தொடங்கியுள்ளனர்.

தொண்டர்களின் கூட்டத்தால் அந்த தெருவே நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. தீபா வீட்டு முன்பாக திரண்ட அவர்கள் ‘ நீங்கள் தான் அம்மாவின் ரத்த சொந்தம், நீங்கள்தான் தான் அதிமுகவிற்கு தலைமை ஏற்க வேண்டும் என ஆவேசமாக முழக்கமிட்டு வருகின்றனர்.

நீங்கள் தான் படித்தவர்கள், அம்மாதான் உங்களை பொலிடிக்கல் சயின்ஸ் படிக்க வைத்தார்கள், கழகத்திற்கு தலைமை தாங்கும் தகுதி உங்களுக்குத்தான் இருக்கிறது என தீபாவைப் பார்த்து கெஞ்சி வருகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை பார்த்து தீபா கரங்களைஅ அசைப்பதும், இரண்டு விரல்களை காட்டுவதும் தொண்டர்களை உணர்ச்சிவசப்பட வைக்கிறது. தீபாவும் அவர்களின் எண்ணம் அறிந்து செயல்படுகிறார்.

அவர் தொண்டர்களைப் பார்த்தது, அவசரப்பட வேண்டாம் என்றும். விரைவில் தன்னுடைய முடிவை அறிவிப்பதாக சொல்லி வருகிறார்.

அதே நேரத்தில் தீபாவும் நிதானமாக அரசியலில் களமிறங்க முடிவு செய்துள்ளார்.

தனக்கு உண்மையிலேயே ஆதரவு இருக்கிறதா? தொண்டாகளை நம்பி களத்தில் இறங்கலாமா என்பது குறித்து யோசித்து வருகிறார்.

தன்னுடைய வீட்டு  முன்பு கூடும் கூட்டம் போல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆதரவு இருக்கிறதா என்பது தொடர்பாக தகவல்களை சேகரித்து வருகிறார்.

அடுத்த தலைவி உருவாகிறார்…விரைவில் அரசியலில் களமிறங்க தயாராகிறார் தீபா…

PREV
click me!

Recommended Stories

தமிழ்நாட்டிற்கு 'நோ என்ட்ரி'! உங்க பருப்பு இங்கெல்லாம் வேகாது.! முதல்வர் ஸ்டாலினின் அதிரடி அட்டாக்!
சங்கீதாவை தூண்டிவிட்டதே ஸ்டாலின் தான்..! விஜய்க்கு முதல்வர் முதல்வர் பதவி..! அமித் ஷா ஆஃபர்..!