ஜெ., சாவில் உள்ள மிகப் பெரிய உண்மை எனக்குத் தெரியும்… விரைவில் வெளியிடுவேன்; தீபா அதிரடி….

 
Published : Jun 17, 2017, 09:59 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
ஜெ., சாவில் உள்ள மிகப் பெரிய உண்மை எனக்குத் தெரியும்… விரைவில் வெளியிடுவேன்; தீபா அதிரடி….

சுருக்கம்

Deepa says Another twist to Jayalalithaa death mystery

ஜெயலலிதாவின்  மரணத்தில் உள்ள மிகப் பெரிய உண்மை ஒன்று தனக்குத் தெரியும் என்றும், இது குறித்து விசாரணை கமிஷன் அமைத்தால் அந்த உண்மையை சொல்வேன் என்றும் தீபா கூறினார்.

சென்னையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ஜெயலலிதா மருத்துனையில் சிகிச்சை பெற்ற போது அவரை பலமுறை பார்க்க முயன்றும் தன்னால் முடியவில்லை என கூறினார்.

ஜெயலலிதா தனது சொந்த அத்தையாக இருந்தபோதும் அவரை சந்திப்பது சாத்தியமாகவில்லை என தெரிவித்த தீபா, அப்போதே எனக்கு சந்தேகம் இருந்தது என கூறினார். 

ஜெயலலிதாவின்  மரணத்தில் உள்ள மிகப் பெரிய உண்மை ஒன்று அண்மையில் தனக்கு தெரிய வந்ததது என்றும் இது குறித்து விசாரணை கமிஷன் அமைத்தால் அந்த உண்மையை சொல்வேன் என்றும் தீபா தெரிவித்தார்.

ஜெயலலிதா மர்ம  மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைச்ச வேண்டும் என்றும் போயஸ் தோட்டத்தில் பணிபுரியும் ராஜம்மாவிடமும் இந்த மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தீபா தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!