*தீப ஒளியாக மாறிய தீபா*

Asianet News Tamil  
Published : Jan 05, 2017, 08:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
*தீப ஒளியாக மாறிய தீபா*

சுருக்கம்

*தீப ஒளியாக மாறிய தீபா*

சென்னை தி. நகரில் உள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டு முன்பு ஆயிரத்திற்கு மேற்பட்ட அ.தி.மு.க.வினர் திரண்டுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர். அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்கக்கோரி தீபாவை வலியுறுத்தி அதிமுகவினர் முழக்கமிட்டனர். 

இடைத்தேர்தலில் தீபா போட்டியிட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தீபா கூறியிருந்தார் ஆதனால் வந்திருக்கிறோம் என்று தொண்டர்கள் முழங்கினார். மேலும் இடைத்தேர்தலில் தீபா போட்டியிட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளார்.

*தொண்டர்கள் மத்தியில் தீபா பேச்சு :*

தமது அரசியல் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொண்டர்களிடம் தெரிவித்தார். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்தார். மேலும் தமது வீட்டு முன் குடியிருந்த அதிமுக தொண்டர்கள் முன் இரட்டை விரலைக் காட்டி ஜெ. தீபா தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

*செய்தியாளர்களிடம் தீபா பேட்டி :*

தொண்டர்களின் கருத்தை அறிந்து எனது முடிவை அறிவிப்பேன் என ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை வீட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ஜெயலலிதா விட்டு சென்ற நற்பணிகளை தொடர்வதே தமது லட்சியம் என்று தெரிவித்தார். மேலும் சசிகலா கட்சிப் பொறுப்பு ஏற்றுள்ளது குறித்து கருத்துச் சொல்ல விரும்பவில்லை என கூறியுள்ளார். வருங்காலத்தை மனதில் வைத்தே எனது முடிவை அறிவிப்பேன் என ஜெ.தீபா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

*சசிகலாவுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு :*

சசிகலாவை கட்சி பொதுச்செயலாளராக ஏற்க முடியாது என அதிமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்துளள்னர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கட்சிப் பொறுப்பை ஏற்றால் மகிழ்ச்சி அடைவோம் என தெரிவித்தனர்.

மேலும் மருத்துவமனையில் நடந்தது என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்சி நிர்வாகிகளின் ஆதரவுதான் சசிகலாவுக்கு இருக்கிறது; தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

TN Politics 2026: திமுக ஆதரவில் தவெக ஆட்சி? இது உ.பி.க்களின் பெருமிதம் அல்ல! விஜய்யின் 'செக் மேட்' அரசியல்! செம வியூகம்!
TVK Vijay: சுப்ரீம் கோர்ட் போகும் தளபதி விஜய்? TVK-வின் 'பிளான்-B' ரெடி! தமிழ்நாட்டில் மகாராஷ்டிரா சீன் ரிப்பீட் ஆகுமா?