அரசியலில் குதிப்பது உறுதி - ஜெயலலிதா பிறந்த நாளில் அறிவிப்பேன் தீபா பேட்டி

 
Published : Jan 17, 2017, 12:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
அரசியலில் குதிப்பது உறுதி - ஜெயலலிதா பிறந்த நாளில் அறிவிப்பேன் தீபா பேட்டி

சுருக்கம்

தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று தான் அரசியலில் குதிப்பது உறுதி என்று தீபா இன்று தெரிவித்தார். சசிகலா தலைமையை ஏற்கவில்லை, தனது முடிவை ஜெயலலிதா பிறந்த நாள் அன்று அறிவிப்பதாக கூறினார்.

அவர் பேட்டி : 

 அனைவருக்கும் எனது நன்றி முதன் முறையாக உரையை ஆற்ற உள்ளேன்,  இந்த செய்தி அனைவரிடமும் சென்று சேரவேண்டும் எனபதே என் எண்ணம். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு அடிதொழுது பேரன்பு கொண்ட என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகள் அனைவருக்கும் வணக்கம்.

 தென்னகத்து பெர்னாட்ஷா அவர்கள் கண்டெடுத்த எம்ஜிஆர் கண்டெடுத்த அன்புத்தலைவி. தமிழக மக்களை தனது பிள்ளைகளாக் ஏற்று அம்மா என்று அழைக்கப்பட்டவர். நீங்கள் தெய்வமாக எங்களை வழி நடத்த வேண்டும். 

தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா வழி நின்று அதிமுகவை தொடங்கியவர் எம்ஜிஆர், அவரது மறைவுக்கு பின்னர் கட்சியை கட்டி காப்பாற்றி வந்தவர் ஜெயலலிதா. உடல்  நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக அவர் நம்மை விட்டு மறைந்தார். அவர் மறைந்த அதிர்ச்சி மறைவதற்குள் அரசியலில் ஏகப்பட்ட அதிர்ச்சி சம்பபவங்கள் ஏற்ப்பட்டது.

நம் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் வல்லமை பெற்ற இளைஞர்கள், தொண்டர்கள் ,  நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைப்பது தெரியும். நான் சாதாரணமான குடும்ப பெண் எனக்கென்று குடும்ப பொறுப்புகள் உள்ளது. ஆனாலும் தங்கள் அழைப்பை பெரிதாக நினைக்கிறேன். இனி வருங்காலங்களில் தமிழ்நாட்டின் நலனுக்காகவும் , தமிழ் மக்களுக்காகவும் என் வாழ்க்கையை அர்ப்பணிப்பேன். எம்ஜிஆர் , அம்மா நல்லாசியோடு அவர்கள் பாத சுவடு வழி நடந்து மக்கள் பணியாற்ற உள்ளேன்.

அண்ணா திமுகவின் பசுமை காக்கும் இலைகள் தொண்டர்கள், அவர்கள் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்தேன், இன்று முதல் புதிய பாதையை துவக்க உள்ளேன். மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா என்று பாடிய  ஏழை பங்காளன் எம்ஜிஆர் பிறந்த நாளில் என் அரசியல் அத்யாயத்தை துவக்க உள்ளேன்.

எம்ஜிஆர், அம்மா வழிகாட்டுதலில் அவர்கள் ஆசியோடு பணியாற்ற உறுதியேற்றுள்ளேன். உங்கள் அன்பு சகோதரி வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன். அவர்கள் எண்ணத்தின் படி உங்கள் அன்பும் ஆதரவும் ஆலோசனைப்படி உங்கள் உழைப்பை இன்று முதல் தமிழகத்தை ஆசியாவிலேயே சிறந்த மாநிலம் ஆக்க நாம் பாடுபடவேண்டும்.

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், அம்மா மீது உண்மையான அன்பு கொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

இந்த நேரத்தில் எனது கடமையை ஆற்ற உதவி புரிந்த அனைவருக்கும்  நன்றி. அம்மா அவர்களின் பிறந்த நாளில் அரசியலில் நான் ஈடுபடும் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.

மக்களின் கருத்தையும் ,அனைவரின் கருத்தையும் கேட்டு விட்டு பிறகு அரசியல் பயணம் மேற்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். மக்களுக்கு பணியாற்ற காத்திருக்கிறேன். அனைவரின் ஆதரவுக்கும் மீண்டும் ஒரு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நீங்கள் சசிகலா தலைமையை ஏற்றுகொள்கிறீர்களா இல்லையா நேரடியாக சொல்லுங்கள் 

நான் யாரையும் ஏற்றுகொள்ளவில்லை, எம்ஜிஆர் , ஜெயலலிதா  இடத்தில்  யாரையும் ஏற்றுகொள்ளவில்லை. 

இன்று முக்கிய அறிவிப்பு சொல்வதாக சொன்னீர்கள் அது என்ன முக்கிய அறிவிப்பு?

 இதுவரையில் அரசியலுக்கு வருவேனா வரமாட்டேனா ஓடிவிடுவேனா, பயந்துவிட்டேனா என்ற கேள்வி இருந்தது. இந்த நாளில் அரசியலில் ஈடுபடுவேன் , அதை விரும்புகிறேன் நான் அரசியலில் ஈடுபடுவேன் இதுதான் அந்த முக்கிய அறிவிப்பு.

பாஜக உங்களை ஆதரிக்கிறதா

இதுவரை நாங்கள் யாரையும் அணுகவில்லை, ஆதரவும் கேட்கவில்லை. யாரும் எங்களை ஆதரிக்கவில்லை.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு