அசுர பலம் பெறும் அதிமுக !! இணைகிறது தீபா பேரவை .. ஓபிஎஸ் , இபிஎஸ்க்கு கடிதம் அனுப்பிய தீபா மற்றும் மாதவன் ..

Published : Aug 19, 2019, 03:07 PM ISTUpdated : Aug 19, 2019, 03:10 PM IST
அசுர பலம் பெறும் அதிமுக !! இணைகிறது தீபா பேரவை .. ஓபிஎஸ் , இபிஎஸ்க்கு கடிதம் அனுப்பிய  தீபா மற்றும் மாதவன் ..

சுருக்கம்

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை நடத்தி வரும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா , தனது இயக்கத்தை அதிமுகவில் இணைக்க விரும்புவதாக முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு கடிதம் அனுப்பியுள்ளனர் .

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் மகள் தீபா . ஜெயலலிதா மறைந்த பிறகு இவரும் ஒரு கட்சி தொடங்கி , அவரின் அரசியல் வாரிசு தான் தான் என அறிவித்து கொண்டார் . எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என கட்சி நடத்தி வந்தார் .

இந்த நிலையில் தீபாவிற்கும் அவரது கணவர் மாதவனுக்கு ஏற்பட்ட பிரச்சனையில் மாதவன், எம்ஜிஆர் ஜெஜெ திராவிட முன்னேற்ற கழகம் என்ற தனிக் கட்சியை தொடங்கினார் . பின்னர் இருவரும் சமாதானம் ஆகி , இரண்டு கட்சிகளையும் இணைத்து கொண்டனர் .

தற்போது தீபாவும் மாதவனும் சேர்ந்து அதிமுக தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர் .அதில் அம்மா இறந்த போது அலைகடலென தொண்டர்கள் திரண்டு வந்து தன்னை அரசியலுக்கு அழைத்ததால் தான் கட்சி தொடங்கியதாகவும் , அதே தொண்டர்கள் இப்போது அதிமுகவில் இணைய கூறுவதால் , தாய் கழகத்தோடு இணைய விரும்புவதாக தெரிவித்துள்ளார் .

அதில் தீபா மற்றும் மாதவன் இருவரும் முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள்  துணைப் பொதுச்செயலாளர்  என முறையே  கையெழுத்து போட்டு உள்ளனர் .

PREV
click me!

Recommended Stories

பிரதமர் மோடி 100 தடவை தமிழகம் வந்தாலும் நோ யூஸ்.. NDA மூழ்கும் கப்பல்.. போட்டுத் தாக்கிய காங்கிரஸ்!
பாஜக வழிக்கு வந்த டிடிவி.. பிடி கொடுக்காத பிரேமலதா.. தேமுதிக யாருடன் கூட்டணி? அதிரடி அறிவிப்பு!