திண்டுக்கல்லில் திமுக ஆட்டம் ஓவர்...! வெடிமருந்து வழக்கை தூசுதட்டி கையிலெடுத்தது அதிமுக...! உச்சநீதிமன்றத்தில் ஆதாரங்கள் தரப்பட்டது...!

By vinoth kumarFirst Published Aug 19, 2019, 2:52 PM IST
Highlights

2014-ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் அய்யம்பாளையத்தில் சட்டவிரோதமாக கல்குவாரிகளுக்கு அனுமதி அளித்ததாகவும், சட்டவிரோத குவாரி  வைத்திருந்ததாகவும், அதிலிருந்து அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது, வெடிபொருட்கள் வைத்திருந்தது, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது என முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது உதவியாளர் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது

திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரான திண்டுக்கல் ஐ. பெரியசாமி மீது, அதிமுக தொடுத்த சட்டவிரோத கல்குவாரி வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது, வழக்கு தொடர்பான ஆவணங்களை விரைந்து தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தவிட்டுள்ளது.பழைய வழக்கை மீண்டும் தமிழக அரசு தூசு தட்டியுள்ளதால் நிச்சயம் இதில் ஐ.பெரியசாமிக்கு நெருக்கடி ஏற்படவாய்ப்புள்ளதாக தெரிகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் அய்யம்பாளையத்தில் சட்டவிரோதமாக கல்குவாரிகளுக்கு அனுமதி அளித்ததாகவும், சட்டவிரோத குவாரி  வைத்திருந்ததாகவும், அதிலிருந்து அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது, வெடிபொருட்கள் வைத்திருந்தது, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது என முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது உதவியாளர் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2015ல் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு கடந்த 2018ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால இந்த மேல்முறையீட்டு மனுவை ஏன் அரசு காலதாமதமாக தாக்கல் செய்தது, என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதனையடுத்து இதற்கு பதிலளித்த தமிழக அரசு பல்வேறு சட்ட ரீதியான விளக்கங்கள் பெறுவதற்காகவும் அவர் மீதான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக காலம் தேவைப்பட்டதால் மேல்முறையீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது என விளக்கமளித்தது. ஆனால் நீதிபதிகள் தாமதம் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா, இது மிகவும் பழைய வழக்கு என்பதால் அனைத்து ஆதாரங்களையும் திரட்ட வேண்டும், மேலும் தாமதம் தொடர்பாக விளக்கம் அளிக்கவும் அவகாசம் வேண்டும் என கோரினார். அப்போது கிறுக்கிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு ஏன் இவ்வளவு தாமதமாக மேல்முறையீட்டுக்கு வந்தது? மேல்முறையீடு செய்ய கால தாமதம் ஏற்படுத்திய அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய கால தாமதம் ஏற்படுத்திய அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றர். அப்படியெனில் துறை ரீதியாக அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர் இந்த வழக்கை விசாரிக்கிறோம் என கூறி வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர் 

இந்த வழக்கிற்கு வேவையான ஆதாரங்களை திரட்டி  குற்றம் செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அதிமுக அரசு முனைப்பு காட்டிவருகிறது, வழக்கு தொடர்ந்து நடைபெற்றால் நிச்சயம் முன்னாள் அமைச்சரும் ,திமுகவின் முன்னணித்தலைவர்களில் ஒருவருமான ஐ. பெரிய சாமிக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

click me!